ஜனாதிபதி பதவியேற்று இன்றுடன் இரண்டு வருட நிறைவு - நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்வுகள்

னாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (08) இரண்டு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமய நிகழ்ச்சிகள் மற்றும் இன்று மாலை பி.எம்.ஐ.சி.எச். இல் ஜனாதிபதியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் என்பனவும் இடம்பெறவுள்ளன. இதில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அய்ஷத்-
கெளரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பதவுயேற்று இரண்டான்டு பூர்த்தியாவதை முன்னிட்டு விசேட வைபவங்கள் இன்று(2017.01.08) அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கிராம சேவகர் இரிவுள் தோறும் இடம் பெற்றது.

இதன் ஒரு அங்கமான மரம் நடுகை வைபவம்அக்கரைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஹூசைன்தீன் தலைமையில் இடம் பெற்றது. இதில் நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.பாறுக், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ரீ.எம்.அன்வர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பீ.எம்.சரீப் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு மரங்களை நட்டி வைத்தனர்.


க.கிஷாந்தன்-
னாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இரண்டு பதவி பூர்தியினை முன்னிட்டு அவருக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டியும் மழை வேண்டியும் பிரித் பிராயணம் ஒன்று 06.01.2017 அன்று இரவு அட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்களான ட்பளியூ.ஜேரணசிங்க மற்றும் தர்மபிரிய அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பிரித் பாராயணத்திற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

இதன் மத்திய மாகாணத்தில் நிலவும் வறட்சியன காலநிலையினையடுத்து ஆறுகள் ஓடைகள் நீருற்றுக்ள நீர்த்தேக்கங்கள் ஆகிய வற்றிப் போய் உள்ளன எனவே மழை வேண்டியும் இப்பிராயணத்தில் விசேட பிரார்தனைகள் இடம்பெற்றதுடன் பிரித் பிராயணத்தில் வைத்து பிரார்தனை செய்யப்பட்ட புனித நீர் நீர்தேக்கங்களிலும் நீரேந்தும் பிரதேசங்களிலும் தெளிக்கப்பட்டன.

சுமார் 16 பௌத்த மதகுருக்கள் கலந்து கொண்ட இப்பிரித் பிராயத்தினை நடத்தி வைத்தனர் இந்நிகழ்வுக்கு அட்டன் டிக்கோயா நகரசபையின் பதில் செயலாயர் பிரியதர்ஷினி, உட்பட ஊழியர்கள் பிரதேச வாசிகள் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -