அதாஉல்லாவை இழந்து தவிக்கிறது அம்பாரை மாவட்டம்...

கிழக்கான் அஹமட் மன்சில்-

டந்த பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளாராக களம் இறங்கி தோல்வி அடைந்த அக்கறைபற்று ஈன்றெடுத்த அரசியல் ஞானி அதாஉல்லா வை மீண்டும் ஒரு முறை ஞாபகபடுத்துகிறேன்.
அம்பாறை மாவட்டத்தின் அக்கறைப்பற்றில் பிறந்த அதாஉல்லா அரசியல் நகர்வுகளை சமயோசிதத்துடன் முன்னெடுக்கும் அரசியல்வாதி.கடந்த பொதுத்தேர்தலில் போட்டி இட்டிருந்த போதும் பாராளுமன்ற உறுப்பினராக அவர் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை அதற்கான காரணங்கள் பலவாறாக கூறப்பட்டாலும் அதனை விரிவாக விளக்கி இக் கட்டுரையை விரிவாக்கவில்லை.

திகாமடடுல்ல தேர்தல் மாவட்டத்தை பொறுத்தவரை அதிகமான அமைச்சு பதவிகளை வகித்த பெருமை அதாஉல்லாவையே சாரும்.அரசியல் வியூகங்களை வகுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.கிழக்கு மாகாண சபைக்கு மூன்று உறுப்பினர்களை அனுப்பும் திறன் சிறந்த உதாரணமாகும்.அரசியல் அநாதைகளாக்கப்பட்ட ஊர்களிற்கும் அதிகாரப் பகிர்வை அளிக்க கூடிய அரசியல் சாணக்கியர் என கூறலாம்.

தலைவர் அஷ்ரப்பிற்கு பின்னர் கிழக்கு மாகாணத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை செய்து காட்டியவர் யார் என கேள்வி எழுப்பப்பட்டால் மக்களின் விரல்கள் அதாஉல்லாவின் பக்கமே திரும்பும்.பிரதேசவாதம் இன்றி அபிவிருத்திதிட்டங்களை முன்னெடுக்கும் சிறந்த பிரதிநித்துவத்தை இன்று அம்பாறை மாவட்டம் அதிலும் குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்கள் இழந்து தவிக்கிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் புதிதாக உதயமான மயில் கட்சியே அம்பாறை மாவட்டத்திற்கு வர விருந்த அமைச்சுப்பதவியை பறித்தெடுத்தது.முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்க இருந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெருபான்மை சமூத்திற்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டது. 33000 வாக்குகளை பெற்ற மயில் கட்சி இன்று உமையாகி விட்டது.முஸ்லிம் வாக்காளர்களை ஏமாற்றி வாக்குகளையும் பெற்று,அரசியல் அநாதைகளாகவும் ஆக்கி விட்டு சென்றிருக்கிறார் அதன் தலைவர் அமைச்சர் றிஷாட் பதுறுதீன்.

அம்பாறை மாவட்ட முஸ்லிம் வாக்காளர்கள் வெளியூர் முடவனை கண்டு உள்ளுர் அழகனை கைவிட்டு நடுத்தெருவிற்கு வந்தபிறகு கைசேதப்பட்டு விட்டோம் என புலம்புவதில் அர்த்தமில்லை.33000 வாக்குகளை பெற்றுக் கொடுத்த ஒவ்வொரு ஊரிலும் உள்ள மயிலாட்டிகள் தங்களது சுய நலங்களை சிந்தித்தார்களே தவிர சமூக நோக்கத்தை மறந்து விட்டார்கள்.மயில் கட்சி காரர்கள் பெற்ற வாக்குகளுக்கு இதுவரை அம்பாறை மாவட்டத்துக்கு செய்த கைமாறு என்ன எனக் கேட்டால் வாய்களுக்குள் முட்டை பொறுத்ததை போல் முழிக்கின்றனர்.

அண்மைக்காலங்களில் அம்பாறை மாவட்டம் அபிவிருத்தி செயற்பாடுகளில் பிண்னடைவு கண்டிருக்கிறது.புதிய கட்டிடங்கள்,கல்வி அபிவிருத்திகள்,சுகாதார அபிவிருத்திகள் என களைகட்டிய மாவட்டம் இன்று மயான அமைதியாக காட்சியளிக்கிறது.முற்றத்து மல்லிகை மனப்பதில்லை என்பதை தற்போது அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் புரிந்துள்ளனர்.வரலாற்று தவறை இழைத்த குற்ற உணர்ச்சியில் அதிகமான வாக்காளர்கள் மனம் வருந்துகின்றனர்.கிழக்கிற்கான ஒரு தலைமைத்துவம் இழக்கப்பட்டுவிட்டது.

வடக்கு கிழக்கை பிரித்து அதில் வெற்றியும் கண்ட துணிச்சலான அரசியல் தலைவனாக வலம் வந்தவர்தான் அதாஉல்லா.அம்பாறை மாவட்டத்தில் பிறந்த ஒருவனுக்கு தான் புரியும் தனது மாவட்டத்தின் தாகத்தை.வன்னி மைந்தனுக்கோ,கண்டி ராஜாவுக்கோ ஒரு காலமும் விளங்கப்போவதில்லை என அவர்களின் செயற்பாடுகள் மக்களுக்கு புலப்படுத்தி விட்டன.அதாஉல்லா மீண்டெழ வேண்டும் என அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்கள் அவரிடம் வினயமாக கேட்டுக் கொள்கின்றன.புதிய விதி எழுத மீண்டும் அவர் அரசியல் புரட்சிக்கு புறப்பட வேண்டும்.

புதிய கட்சியாக மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி எறிந்த மயில்கட்சி காரர்களின் அம்பாறை மாவட்ட எதிர்கால செயற்பாடுகள் பூச்சியமாகவே அமையும்.சுய நல அரசியல் அல்லக் கைகளை நம்பி ஒரு முறைதான் ஏமாற முடியும் என்பதை மக்கள் விளங்கிவிட்டார்கள்.அதாஉல்லாவின் கை பலப்படுத்தப்படும் என்பது அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் முடிவாகிவிட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -