ஊடகவியலாளர்கள் வெறுமனே விமர்சிப்பவர்களாக மாத்திரம் இருக்கக்கூடாது.அதற்கான தீர்வினை முன்வைப்பவர்களாகவும் இருக்கவேண்டும்.
பணம்தான் இலக்கு என்கின்ற பார்வையை விட்டு கொஞ்சம் வெளியே வந்து சமுகம் சார்ந்த விடயங்களிலும் அதிக கவனஞ்செலுத்த வேண்டும்.
இவ்வாறு 2016 க.பொ.த.உயர்தரத்தேர்வில் மாவட்ட மட்ட சாதனை படைத்த காத்தான்குடி மாணவர்களை கௌரவிக்கும் விழா காத்தான்குடி ஊடகவியலாளர் மன்றத்தினால் காத்தான்குடியில் நடாத்தப்பட்டபோது அதன் தலைவர் ரீ.எல்.ஜவ்பர்கான் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்--
ஊடகவியலாளர் பணி என்பது ஏனைய சில தொழில்களைப் போல உழைப்பை மாத்திரம் இலக்காகக் கொண்டதல்ல. சமுகம் சார்ந்த அடைவுகளை எட்டுவதற்கான களமுமாகும்.
அதன் ஒரு கட்டம் தான் இந்தப்பாராட்டு விழா.
இன்றை முகநூல் உட்பட சில சமுக வலைத்தளங்களின் வருகையின் பின்னர் ஊடகப்பணி தூய்மையானதும் சமுகப்பார்வை கொண்டதும் என்கின்ற எண்ணப்பாடு சற்று விலகிச் செல்கின்றதோ என எண்ணத் தோண்றுகின்றது.
இன்று முகநூலின் ஆக்கிரமிப்பின் பின்னர் அலைபேசி வைத்திருப்பாவர்
களெல்லாம் ஊடகவியலாளர்கள் என்கின்ற நிலைமை உருவாகியுள்ளது.
இது ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கிச் செல்லுமா என்கின்ற கேள்விக்குறி உருவாகியுள்ளது.
தமக்கு வேண்டாதவர்களை முகமூடி அணிந்து கொண்டு திட்டுகின்ற களமாக அது மாறிவிட்டது.
முஸ்லிம் சமுகம் வெறுமனே வர்த்தக சமுகம் என்கின்ற அடையாளம் மெல்ல மெல்ல மறைந்து வருவதற்கு இம்மாணவர்களின் இமாலய சாதனைகளும் சான்று பகர்கின்றன.
எதிர்காலத்தில் கல்வித்துறையில் சாதனை நிறைந்த ஒரு சமுகமாக மாறுவதற்கான எடுகைதான் இத்தகைய வெளயீடுகள்.
இதனை எப்படியாவது பாராட்டியே ஆகவேண்டும் என்பதற்காகவே பரீட்சை முடிவுகள் வெளியாகி 24 மணிநேரத்தினுள் இவ்விழாவை அல்லாஹ்வின் உதவியால் நடாத்தியுள்ளோம் என்றார்.