அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலயமும் புதிதாக வரும் மழை வெள்ளமும் -படங்கள்

அந்நூர் பற்றாளன்-
 
ட்டாளைச்சேனை கோணாவத்தையில் இருக்கும் அந்நூர் மகாவித்தியாலயம் என்னும் பெயருடைய பாடசாலை.
 இதனை அன்று தொட்டு இன்று வரை சிலர் கறிவேப்பிலையாகவே பயன்படுத்தி வருகின்றனர்.

கோணாவத்தை 8ஆம் பிரிவு சிலருக்கு கொந்தராத்துச் செய்யும் ஒரு கிராமமாக பழகிவிட்டது. வீதிகளையும், மைதானங்களையும், கடற்கரையையும், அக்கரையூர் இளைஞர்களையும் காட்டி அரசியல்வாதிகள் மற்றும் சிலரிடம் பணம்களைக் கறந்து கொந்தறாத்தும் கொள்ளையடிப்புக்கும் இந்த கோணாவத்தையைப் பயன்படுத்துவோரால் ஏற்படும் விளைவுகளே இவ்வாறான மழை நீர் தேங்கி நிக்கும் படலமும்.

சரியான, தீர்மானங்கள், ஆலோசனைகள் இல்லாமல் அமையப்பெறும் எதுவும் நிரந்தமாக இருந்த சரித்திரம் கிடையாது. சிலர் ஆலோசனை பெற விரும்புவதில்லை. ஏன் என்றால் ஆலோசனை பெற்றால் பங்கு கொடுக்க வேண்டும் என்ற அச்சம். அதனால் இரகசியமாகச் சுருட்டிக்கொள்ள சில மந்தங்களைக் கூட்டுச்சேர்த்து கோமாளித்தனம் செய்து கொள்வார்கள்.

இந்த அந்நூர் பாடசாலையை இன்றய அரசியல்வாதிகள் புறக்கணித்து வருவதனைப் பார்க்கும்போது கவலைவருகிறது. கல்விக்கு உதவ முன்வருகிறார்கள் இல்லை. சிலர் நாங்கள் பேண்ட் வாத்தியக் கருவிகள் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறோம் என்றும் பீத்திக்கொள்கின்றனர். அதனை குப்பையிலும் இன்று பெற்றுக்கொள்ளலாம். இந்த கோணவத்தை ஊரில் இருக்கும் அந்நூர் மகாவித்தியாயத்தின் இன்றைய தேவைகள் அதிகம்.
 அதனை நேரில் வந்து கேட்கும் நிலையில் அட்டாளைச்சேனை அரசியவாதிகள் இல்லை என்பதே சுட்டிக்காட்டலாகும். 
எனவே இப்படியான மழைநீர் உடனடியாக வடிந்தோடவும் இப்பாடசாலை முன்னைய நிலையைப்போன்று சரியாக இயங்க உதவிகள் பல செய்ய வேண்டும்.

எனவே மீண்டும் பாடசாலைகளையும், மீனவர்களையும், விளையாட்டுக் கழகங்களையும், கிராமத்து இளைஞர்களையும் விற்றுப்பிளைக்கும் சில கொந்தராத்து முதலைகளை விரட்டியடித்து ஊருக்கான சரியான சேவைகளையும், தேவைகளையும் பெற்றுக்கொள்ள நல்ல சிந்தனையுள்ள வீதியில் நின்று மட்டும் வீராப்புப் பேசாது களத்தில் இறங்கி கஷ்டப்படும் கருணையுள்ளவர்கள் முன்வரவேண்டும் என்பதே இன்றய கட்டாயத்தேவையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -