பாலமுனை அன்னூர் மதரசாவிற்கு ஜெனறேட்டர் வழங்கும் நிகழ்வு..!



எம்.ரீ.ஹைதர் அலி-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒயொதிக்கீட்டிலிருந்து பாலமுனை மத்ரசதுல் அன்னூர் பகுதி நேர அல்குர்ஆன் மதரசாவிற்கு 65000 ரூபா பெறுமதியான ஜெனறேட்டர் (மின் பிறப்பாக்கி) வழங்கும் நிகழ்வு 2016.12.30ஆந்திகதி - வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இந்நிகழ்வானது மத்ரசதுல் அன்னூர் கலாசாலையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எஸ்.எம். பைரூஸ் (பலாஹி) தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கலந்துகொண்டு ஜெனறேட்டரை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறூக்...

பாலமுனையில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பகுதி நேர அல்குர்ஆன் மனனபீடத்திற்கு இவ்வாறான உதவிகளை நேரடியாகக் கலந்துகொண்டு கையளிக்க வாய்ப்புக்கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். உண்மையில் உலமாக்கள், ஹாபிழ்கள் என்பவர்கள் இந்த சமூகத்தினுடைய ஆத்மீகத்தலைவர்கள். பெறுமதிமிக்கவர்களை பெறுமானம் குறைத்து கதைக்கின்ற நிலைமைகளை இன்று நாம் அவதானிக்க முடிகின்றது. 

உலகலாவிய ரீதியில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் ஏனைய துறையை சார்ந்த பட்டம் பதவிகளையுடையவர்கள் மாத்திரம்தான் உயர்ந்தவர்கள் என்கின்ற சிந்தனை குறிப்பாக முஸ்லிம் சமூகத்திடம் இன்று காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. எந்தவொரு விடயத்தையும் நாங்கள் செய்ய வேண்டுமாயினும் உலமாக்களுடைய தலைமைத்துவத்தின் கீழ் அவர்களுடைய வழிகாட்டுதலில் நாம் செயற்படுகின்றபோது, இரண்டு வகையான நன்மைகளை நாம் அடைந்து கொள்ள முடியும். ஒன்று இன்மையுடன் தொடர்பானது மற்றயது மறுமையுடன் தொடர்பானதுமாகும் என தெரிவித்தார். 

மேலும், பாலமுனையில் பெண்களுக்கான பகுதி நேர அல்குர்ஆன் மத்ரசாவொன்றினை ஆரம்பிக்கவிருப்பதாக இங்கு என்னிடம் தெரிவித்தனர். இவ்வாறானதொரு மத்ரசா அமைவதென்பது நல்லதொரு விடயமாகும். இன்ஷாஅல்லாஹ் எதிர்காலத்தில் எங்களால் இயலுமான உதவிகளையும் இவ்மத்ரசாவுக்கு வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.

நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் மர்சுக் அஹமட்லெப்பை, மத்ரசதுல் அன்னூர் கலாசாலையின் அதிபர் கே.எம். சுல்தான் (பலாஹி), நிர்வாக சபை உறுப்பினர்கள், பாலமுனை அல்ஹிதாயா சனசமூக நிலையத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் மத்ரசா மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -