ஷிப்லி பாறுக்கின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி..!

ஹைதர் அலி-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முழு முயற்சினால் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொங்ரீட் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டு வரும் காத்தான்குடி டெலிகாம் வீதியின் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட புனரமைப்பு வேலைகள் தற்போது பூரணப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்டெலிகாம் வீதியில் ஒரு பக்கம் மாத்திரமே வடிகான் அமைந்துள்ளதால் வடிகான் அமைந்துள்ள பக்கத்திற்கு எதிர் பக்கமாக டெலிகாம் வீதியுடன் வந்து சேருகின்ற வீதிகளுக்கு எதிர்காலத்தில் வடிகான் அமைக்க வேண்டிய தேவை ஏற்படும்போது வடிகானினை அமைப்பதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்ற காரணத்தினால் இப்பிரச்சனையினை தவிர்க்கும் விதமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கினால் டெலிகொம் வீதியின் புனரமைப்பு பணிளை பூரணப்படுத்துவதற்கு முன்னர் இவ்வீதிகளுக்கான குறுக்குக் கான்களை அமைப்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது இத்தகைய மூன்று குறுக்குக் கான்களை அமைப்பதற்குரிய அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கமைவாக பாம் வீதி, கப்பல் ஆலிம் வீதி மற்றும் பதுரியா வீதி ஆகிய வீதிகளுக்குரிய குறுக்குக் கான்கள் தற்போது அமைக்கப்படவுள்ளது.

2017.01.10ஆந்திகதி - செவ்வாய்கிழமை டெலிகாம் வீதிக்கு நேரடியாக விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவ்வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் பொறியியலாளர்கள் மற்றும் கொந்துராத்துகாரர் ஆகியோரை சந்தித்து குறித்த குறுக்குக் கான்களை அமைப்பது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -