மாணவர்கள் மீது பெற்றோர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் - மருதமுனையில் நஸீர்

ருதமுனை அந்-நஹ்லா அரபுக் கல்லூரியில் புதியமாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கல்லூரியின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம்.பதுறுத்தீன் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே, கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மற்றும் சமூகசேவைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் இவ்வாறு தெரிவித்தார்;.

மாணவர்கள் மீது அதிக அக்கறையுடனும் பொறுப்புடனும் பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும். எமது பிள்கைள் நாளைய எமது சமூகத்தின் தலைவர்களாக, சமூகத்தை வழிநடத்துபவர்களாக வரஇருக்கிறார்கள். 

எனவே இவர்களின் இளம் பராயத்தை பாதுகாத்து சரியான வழியைகாட்டும் உன்னதமான பொறுப்பு பெற்றேர்களுக்கு உண்டு. பொதுவாக அமைச்சர்கள் தங்களுடைய பிள்ளைகள் வைத்தியராக, பொறியியலாளராகவர வேண்டும் என நினைப்பார்கள் நான் மாகாண அமைச்சராக இருந்தும் எனதுபிள்ளைகள் மார்க்கக் கல்வியிலே குர்-ஆனை மனனம் செய்தவர்களாக வெளிவரவேண்டும் எனநினைக்கின்றேன். இதற்காகவே எனதுபிள்ளைகளை இந்தக் கல்லூரியில் சேர்த்திருக்கின்றேன். இங்கு வருகைதந்திருக்கின்ற பெற்றோர்களாகிய நீங்கள் அனைவரும் இதனையே எதிர்பார்த்து வந்திருக்கின்றீர்கள் என்பதை ஒருபெற்றோர் என்றவகையில் நான் நன்கு அறிவேன்.

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா இந்தக் கட்டிடத்தை கட்டிக் கொடுத்துவிட்டு தனது பெயரை கட்டடத்தில் பொறிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். திறப்பு விழாவிற்குகூட நான் வரமாட்டேன் என கல்லூரி நிருவாத்தினரிடம் தெரிவித்துள்ளார். இவைகள் தான் மறுமைக்காக செய்கின்ற விடயங்கள் என இங்கு மாகாண அமைச்சர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் சேவையை பாரட்டிப் பேசினார்.

மாகாண அமைச்சர் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மின் பிறப்பாக்கி ஒன்றையும் கல்லூரிக்கு அன்பளிப்பு செய்தார்இந்த நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்செய்ஹ் எம்.ஐ. அமீர், கல்லூரியின் அதிபர் அஷ்செய்ஹ் ஏ. அபூஉபைதா, மௌலவி எப்.எம்.ஏ.அன்சார் மௌலானா, மருதமுனை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர்.ஏ.எல்.எம்.மிஹ்லார் உட்பட பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப் பலர் இதில் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -