மகிந்தவிடம் முபாறக் மெளலவி மூலம் தூது அனுப்பிய அமைச்சர் ரிஷாத்


முகம்மட் அபூபக்கர் மூத்தபோராளி-

கில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் நல்லாட்சியில் அதிருப்தி கொண்டுள்ளார். அவர் மீண்டும் மகிந்த அணியில் இணைந்து கொள்ள மீண்டும் தூதூ அனுப்பிக் கொண்டிருக்கிறார். பல தடவைகளில் உலமாக் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் மூலம் தூது அனுப்பி தன்னை மன்னித்துக் கொள்ளுமாறும் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்து தகவல் அனுப்பியுள்ளார்.

இது சம்மந்தமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கிய புள்ளி ஒருவர் கூறியதை கேட்டேன். எனவே மைத்திரியின் நல்லாட்சியின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தொடர்ந்து இருப்பது சந்தேகமாக இருக்கிறது.

இவ்வாறு தூது அனுப்பவில்லை என்று அமைச்சர் ரிஷாத் கூறுவாராக இருந்தால் சத்தியமிட்டுக் கூறவேண்டும். ஏன் என்றால் ஒரு கட்சியின் உயர்பீட உறுப்பினர் அந்த தலைவரின் அனுமதியில்லாமல் இன்னொரு கட்சியின் மாநாடு மற்றும் முக்கிய கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதியளிக்கப் படுவதில்லை. ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உருப்பினராக இருக்கும் முபாரக் மஜீட் மகிந்த ஆதரவு அணியுடன் இணைந்து மகிந்தைக்கு ஆதரவு தெரிவித்து ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் செய்து கொண்டிருக்கிறார்.

முஸ்லிம் விரோதியாக இருந்த, முஸ்லீம்களுக்கு பெரும் அநீதியிளைத்த, முஸ்லீம்களின் சொத்துக்களுக்கு நஷ்டத்தை உண்டாக்கிய, முஸ்லீம்களின் மதஸ்தலங்களை உடைத்த, முஸ்லீம்களின் காணிகளை சூறையாட துணைநின்ற இப்படி பல கொடூரங்களைப் புரிந்த ஒரு ஆட்சியாளருக்கு இன்னும் பகிரங்கமாக ஆதரவு வழங்க அமைச்சர் ரிஷாத் உள்ளரங்கமாக அனுமதி வழங்கியிருப்பது பெரும் சந்தேகத்தையே கொண்டுள்ளன.

ஆகையால் அமைச்சர் ரிஷாத்தின் ஆதரவுடன் அவரின் பணிப்பின் பெயரில் இவ்வாறு செய்கிறாரா? அல்லது மகிந்தவிடம் மன்னிப்புத் தூது அனுப்பியிருக்கிறாரா? மகிந்த தேசியப்பட்டியல் கொடுத்ததர்காக நன்றிக்கடன் செய்ய முபாரக் மஜீதைப் பயன்படுத்துறாரா? என்பது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதன் உண்மை நிலை என்ன என்பது பற்றி அறிவிப்பாரா அமைச்சர் ரிஷாத் அத்துடன் இது அமைச்சர் ரிசாத்துக்கு தெரியாமல் நடக்கும் விடயம் என்று தெரிவிப்பாராக இருந்தால் தன் கட்சியின் உயர்பீட உறுப்பினர் செய்யும் பெரும் துரோகத்தனமாக இதனைக் கருதி உடனடியாக முபாரக் மஜீதை கட்சியை விட்டு உடனடியாக விலக்குவாரா என்று மக்கள் எதிர்பார்ப்புடன் கேள்வியைத் தொடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -