தீவிரவாதத்திற்கு எதிரான தவ்ஹீத் ஜமாஅத் நடாத்தும் மாபெரும் மாநாடு..!

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்து வந்த ஐம்பது நாட்களைக்கொண்ட தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

கடந்த டிசம்பர் மாதம் 11ம் திகதி முதல் ஆரம்பமான இம்மெகா பிரச்சாரத் திட்டம் “முஸ்லிம்கள் தீவிரவாதிகளல்லர்! மனிதநேயத்தை ஆசிக்கும் சமாதானப் பிரியர்கள்” எனும் முத்தான கருத்தை பிறர் மனங்களில் பதிய வைக்க பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுத்தது.

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்து வந்த இம்மெகா பிரச்சாரத் திட்டத்தின் சாராம்சமாக தீவிரவாதத்தை எதிர்த்து மாபெரும் மாநாடு ஒன்றை சம்மாந்துறை அல்மர்ஜான் மைதானத்தில் வருகிற சனிக்கிழமை 28-01-2017 அன்று நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் இம்மாநாட்டில் கலந்துகொல்வதட்காக தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து கிளைகளிலிருந்தும் வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றுபவர்களும் தலைப்புகளும்:

1. ஷில்மி ரஷீதி (துணை செயலாளர் SLTJ) : இஸ்லாம் கூறும் மனித நேயம்
2. தவ்ஸீப் அஹமட் (பேச்சாளர் SLTJ) : இஸ்லாம் அமைதியின் மார்க்கம்(சிங்கள உரை )
3. அப்துல் ஜப்பார் (பேச்சாளர் SLTJ) : உலக அமைதிக்கு ஒரே வழி இஸ்லாம் ஒன்றே (ஆங்கில உரை)
4. FM ரஸ்மின் M.I.Sc (துணை ஆசிரியர் அழைப்பு மாத இதழ்) : இலங்கை சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு
5. MTM பர்ஸான் (தலைவர் SLTJ) : தீவிரவாதத்தை வேரறுக்கும் இஸ்லாம்

அல்லாஹ்வின் மார்க்கத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் களங்கத்தை துடைப்பதற்காகவும், முஸ்லிம் சமூகத்தின் மீது பரப்பப்படும்அவதூரை அழிப்பதற்காகவும் நாம் மனத்தூய்மையோடு மேற்கொண்ட எமது பணிகளை இறைவன் பொருந்திக்கொள்வானாக.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -