அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்க வேண்டிய காலம் வெகு விரைவில் - ஜவாஹிர் ஆவேசம்



முஸ்லிம் சமூகம் நசுக்கப்படும்போது அரசாங்கத்துடன் தேனிலவு கொண்டாடும் தேவை எமக்கில்லை. எமது சமூகத்தின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய எந்த அரசாவது முனைந்தால் சம்பந்தப்பட்ட மக்களுடன் வீதிக்கு இறங்கி ஜனநாயக வழியில் போராடவும் தயாராவுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் ஜவாஹிர் ஜனோபர் தெரிவித்துள்ளார்.

வில்பத்து விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களின் பூர்வீக வாழ்விடங்களான மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக் குழி முதலான பிரதேசங்களை வில்பத்து சரணாலயத்துக்குச் சொந்தமானது என்று இந்த அரசு இனவாத நோக்குடன் தொடர்ந்தும் சொந்தம் கொண்டாடி மீண்டும் ஒரு 1990 ஒக்டோபரை விடவும் கொடிய நிகழ்வை “நல்லாட்சி” என்ற பெயருக்குள் மறைந்து கொண்டு அரங்கேற்ற முனைவதும் வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இழுத்தடிக்கப்படுவதும் மிகவும் வேதனையை அளிக்கிறது.

எனவே, தமிழ்த் தரப்பு கூறுவது போல் “மோதகமும் கொழுக்கட்டையும் உருவத்தால் வேறுபட்டாலும் உள்ளீடுகள் அனைத்தும் ஒன்றே” என்ற விடயம் நல்லாட்சி ஜனாதிபதியின் அண்மைக் கால செயற்பாட்டிலிருந்து தெளிவாகிக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் சந்தித்த தோல்விகளுக்கான காரணங்கள் இந்த அரசுக்கு ஒரு படிப்பினையாக அமைய வேண்டும். தொடர்ந்தும் இந்த நல்லாட்சி அரசு சிறுபான்மை சமூகத்தின் இருப்பு, சமயம், கலாசாரம், உரிமை என்பவற்றில் கை வைக்குமாக இருந்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மைச் சமூகத்தோடு இந்த அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்க வேண்டிய காலம் வெகு விரைவில் வரும் என்பதில் சந்தேகமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -