முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் வரலாறு

சத்தார் எம் ஜாவித்-

ன்று செவ்வாய்க்கிழமை 17ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முஸ்லிம் பண்பாட்டு கட்டிடத் தொகுதிக்கு தமது பணிகளை மேற் கொள்ளும் வகையில் இந்த நாட்டின் தேசிய நல்லிணக்க அரசின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் பிற்பகல் 4.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளதை முன்னிட்டு இத்திணைக்களத்தின் வரலாறுகளை முஸ்லிம் சமுகம் சிறிதளவேனும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்டுள்ள சில விடயங்கள் உங்களுக்காக முன்வைக்கப்படுகின்றன.

முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் வரலாறு

முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் வரலாறு முஸ்லிம் வக்பு மற்றும் முஸ்லிம் நம்பிக்கை நிறுவனங்களின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்துள்ளது எனலாம்.

முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் தர்ம நம்பிக்கை நிறுவனங்கள் பற்றிய 1956 ஆம் ஆண்டின் 51ஆம் இலக்க சட்டவாக்கத்திற்கு முன்னர் அது தொடர்பான சட்டம் 1931 ஆம் ஆண்டின் முஸ்லிம் அரச இடை தொடர் சட்ட மூலத்தின் 50 ஆவது பகுதிக்கு அமைய நடைமுறைப் படுத்தப்பட்டது.

வக்பு அமைப்பு ஒரு முஸ்லிம் நம்பிக்கையகம் என்ற வகையில் வக்பு அமைப்பு பொது நம்பிக்கையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு அன்று ஸிலோன் என்று அழைக்கப்பட்ட நாடு முழுவதும் நிர்வகிக்கப்பட்டது. 1933 ஆம் ஆண்டு இந்த 1931 ஆம் ஆண்டின் சட்டமூலம் நிர்வாக தேவைகளுக்கு பற்றாததாகக் காணப்பட்டு அதனது சட்டமூலத்தின் குறைகள் நீங்குவதற்கான திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

1933 ஆம் ஆண்டு கலாநிதி. போல் ஈ பீரிஸ் அவர்களின் தலைமையில் அக்காலத்தின் சட்ட வல்லுனரா திரு.எச்.வீ.பெரேரா அவர்களின் இணைப்போடு பிரபல முஸ்லிம் பிரதிநிதிகள் அடங்களாக ஒரு குழு அமைக்கப்பட்டு சட்ட திருத்தத்துக்கான பொறுத்தமான ஆலோசனைகள் பெறப்பட்டன.

இந்தக்குழு அதன் அறிக்கையை அதே வருடம் ஒக்டோபர் மாதம் சமர்ப்பித்து 1935 ஆம் ஆண்டுக்கான் ஓஓஓஏ இலக்க சட்ட அறிக்கையாக பிரசுரிக்கப்பட்டது. எனினும் 1937 ஆம் ஆண்டளவில் இந்த சட்ட மூலம் தொடர்பாக பிரதிநிதித்துவம் செய்த அகில இலங்கை மலே சங்கம் முஸ்லிம் மஸ்ஜிதுகளை பதியப்பட வேண்டிய தேவையை வலியுறுத்தியது.

இதனையடுத்து இந்த சட்ட மூலத்தினை திருத்தி அமைக்கவோ அல்லது புதியதொரு சட்டமூலத்தை உருவாக்கவோ வேண்டுமென்று அன்றைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அதனது சட்ட செயலாளரை பணித்தது.

இதற்கமைய சட்ட செயலாளர் 'முஸ்லிம் பள்ளிகள் மற்றும் தர்ம நிதியகம் பற்றிய சட்ட மூலம்' என்ற தலைப்பில் ஒரு சட்டவாக்கப் பிரதியை பொது நம்பிக்கையாளரின் ஆராய்வுக்கு சமர்ப்பித்தார். இதனை பொது நம்பிக்கையாளர் அக்கால முன்னணி முஸ்லிம்களோடு கலந்தாலோசனை செய்து மேலதிக திருத்தங்கள் உள்வாங்கப்பட்டதாக பிரதி சட்டவாக்கமாக 1943 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி அரசாங்க கெஸட் பிரசுரத்தில் பிரசுரிக்கப்பட்டது.

இந்த நகல் சட்ட மூலத்தின் முதலாவது வாசிப்பு சட்ட சபையில் 1943 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட போது சில முஸ்லிம்கள் அதனது உள்ளடக்கங்கள் சிலவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் விளைவாக இந்த மறுப்புரைகள் ஒரு விஷேட பரிசீலனை செய்யப்படும் வரை இந்த சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு பிற்போடப்பட்டது.

இந்த விஷேட குழு சட்ட மூலத்தில் பொறுத்தமான மேலதிக திருத்தங்ளை செய்து மீள்சட்ட வரைவு செய்வதற்கான பொறுப்பை பொது நம்பிக்கையாளரின் கீழான ஒரு உபகுழுவிடம் ஒப்படைத்தது.

உப குழுவினால் தயாரிக்கப்பட்ட நகல் சட்டமூலத்தை 1946 ஜ}ன் மாதத்தில் ஒரு விஷேட செயற்குழு ஆராய்ந்த பின்னர் நிர்வாகமும் கட்டுப்பாடும் பொது நம்பிக்கையாளரின் கீழ் இருக்கப் போகின்ற காரணத்தால் அதனை மீண்டும் உள்நாட்டு விவகார அமைச்சின் முகாமைத்துவ குழுவும் மறுபரிசீலனை செய்தது.

அதன் பின்பு ஏற்கனவே முதலாம் வாசிப்புக்குப் பின்னர் பின்போடப்பட்ட ஆரம்ப சட்டமூலத்தை வாபஸ் பெறுவதென்றும் பள்ளிவாசல்கள் மற்றும் தர்ம நிதியகங்களை நிர்வகிப்பது தொடர்பாக முஸ்லிம் அங்கத்தவர் ஒருவர் தனிப்பட்ட பரினாலான சட்ட பிரேரனை ஒன்றை சட்டசபையில் சமர்ப்பிக்க வழி விடுவதென்றும் தீர்மானிக்கப் பட்டது.

1952 ஆம் ஆண்டு அன்றைய உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சு மக்கள் பிரதிநிதிகள் சபை மற்றும் மேல் சபையை சார்ந்த முஸ்லிம் அங்கத்தவர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமித்தது. பள்ளிவாசல்கள் மற்றும் தர்ம நிதியகங்களை பதிவு செய்வது பள்ளிவாசல் மற்றும் தர்ம நிதியகங்களின் நிர்வாகத்தினரின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய ஆலோசனைகளையும் சிபாரிசுகளையும் தயாரித்து சமர்ப்பிப்பது அந்த குழுவின் நோக்கமாகும்.

இது தொடர்பாக ஒரு முஸ்லிம் ஆணையாளரை நியமிப்பது தொடர்பாக காரசாரமான விவாதங்கள் இடம் பெற்றன. அத்தோடு அது இலங்கை அரச சட்ட கோவைக்கு முரணானதல்ல என்பதற்கான கலாநிதி எச்.டபிள்யு. தம்பையா மற்றும் ஜனாப் ஏ.எம்.ஏ.அஸீஸ் ஆகியோரின் சட்ட ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்பட்டன என்பதும் பதிவாகியுள்ள விடயங்களாகும்.

அதன் பின்னர் நடைமுறையில் இருந்த சட்டத்தை திருத்துவதற்கான பொதுமக்களின் கருத்துக்களையும் உள்நாட்டு விவகார அமைச்சு கோரியது. இது தொடர்பாக 1952 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி பல முஸ்லிம் வழக்கறிஞ்சர்கள் ஒரு மகாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். இதன் போது எம்.ஐ.எம்.ஹனிபா, ஏ.எச்.எம்.இஸ்மாயில், எம்.எச்.எம்.நயினா மரிக்கார், எம்.மரஹானி, எம்.ஏ.எம்.ஹூஸைன் மற்றும் எம்.இஸ்ஸதீன் முஹம்மத் ஆகியோர் அடங்கிய குழுவொன்று அந்த விடயத்தை ஆராய்ந்து சிபாரிசுகளை சமர்ப்பிக்க மகாநாட்டால் நியமிக்கப்பட்டது.

ஜனாப் எம்.எச்.ஏ.அஸீஸ் உடனான குழு எட்டு முறை அமர்ந்து பல்வேறு நூல்கள் மற்றும் இந்திய சட்டங்கள் என்பவற்றை விரிவாக ஆராய்ந்து அதனது சிபாரிசுகளை ஸாஹிரா கல்லூரியில் 1952 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி நடந்த இரண்டாவது மகாநாட்டில் சமர்ப்பித்தது. இதில் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசுகளை மகாநாடு அனுமதித்தது. இதில் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசுகளாவன:

இஸ்லாமிய ஷரீயா நடைமுறையில் வகுக்கப்பட்டுள்ளது போன்றதாக 'வக்பு' பற்றிய கருத்து அமைய வேண்டும். இஸ்லாமிய சட்ட திட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ள 'வக்பு' சட்டமுறைக்கும் ஆங்கில சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள் தர்ம நிதியகங்களுக்கும் இடையிலான வித்தியாசங்கள் தெளிவாக பதியப்பட வேண்டும். இஸ்லாமிய ஷரீயா சட்டத்திட்டத்துக்கு ஏற்ப வக்பு பற்றிய கருத்து வலியுறுத்தப்பட வேண்டும்.

வக்பு அமைப்பின் நிர்வாக சபை வக்பு ஆணையாளரின் தலைமையில் ஒரு மௌளவி அல்லது மார்க்கத்துறையில் தகுதி பெற்ற ஒருவர் உள்ளடங்களாக ஏழு ஆண் முஸ்லிம்களை கொண்டிருக்க வேண்டும்.

வக்பு ஆணையாளர் பத்து வருட நடைமுறை அனுபவ பயிற்சி; உள்ள புரொக்டராக அல்லது ஆறு வருட நடைமுறை அனுபவ பயிற்சி கொண்ட எட்வகேட்டாக இருக்க வேண்டியது அவசியம்.

பள்ளிவாசல்கள் மற்றும் வக்பு தொடர்பான நாளாந்த நிர்வாக பொறுப்பைக் கொண்டிருக்கும் ஆணையாளரின் தீர்ப்புகளை செவியுற்று தீர்ப்புகளை முடிவெடுக்கும் கடமை இந்த வக்பு நிர்வாக சபைக்குரியதாகும். அவற்றின் வருமானம் எப்படியிருந்த போதிலும், பள்ளிவாசல்கள், தக்கியாக்கள், ஸாவியாக்கள், மார்க்கம் தொடர்புடைய தங்கிடங்கள் அனைத்தும் மற்றும் வக்பு சொத்துக்கள் அனைத்தும் இந்த சட்டவரையறைக்குள் உள்ளடங்கவேண்டும்.

அத்தோடு நடைமுறையில் அன்றைய நாள் இருந்து வந்த வக்பு சட்டமூலம் முஸ்லிம்களுக்கு எந்த நன்மையையும் வழங்க வில்லை. முஸ்லிம்களுக்கு பலனலிக்கக்வும் தவறி விட்டது. ஒரு சட்ட நடைமுறையாக்கல் கருவியற்ற நிலையில் அது வெறும் பெயரளவிலான உயிரற்ற சட்டமாகவே இருந்து முஸ்லிம்களுக்கு இடையில் பிரிவினைகளுக்கும் வாதாட்டங்களுக்குமே வழிவகுத்தது.

இ;ந்த கோரிக்கை மனு ஜனாப்.எம்.ஐ.எம்.ஹனிபா அவர்கள் தலைவராகவும் ஜனாப்.மர்ஹானி அவர்கள் கௌரவ செயலாளராகவும் கையொப்பமிட்டு சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் இணைப்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறிப்பிடப்பட்டன. இதன் முடிவாக '1956 ஆம் ஆண்டுக்குரிய சட்ட இலக்கம் 51 முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வக்பு சொத்துக்கள்' நிறைவேற்றப்பட்டு 1956 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 26 அன்று இலக்கம் 11,112 இலங்கை அரச வெளியீட்டு பிரகடனமாக 1957 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி சட்டமாகியது. 1957 ஆம்ஆண்டு ஜுன் 28 ஆம் திகதி இலங்கை அரச வெளியீட்டு; இலக்கம் 11,137 பிரகடனத்திற்கு அமைய முதலாவது ஆணையாளராக ஜனாப். எம்.ஜே.எம்.முஹ்ஸின் ஊஊளு அவர்கள் தற்காலிக நிலையில் நியமிக்கப்பட்டார்கள்.

இதன் பிறகு 1957 ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் டாம் வீதி இலக்கம் 371Æ4 என்ற முகவரியில் நிறுவப்பட்டது. ஜனாப். எம்.இஸட்.மொஹிதீன் அவர்கள் ஜனாப்.முஹ்ஸின் அவர்களுக்கு அடுத்ததாக ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.

முதலாவதாக நியமிக்கப்பட்ட ஆணையாளர் ஜனாப்.முஹஸின் அவர்களுக்கு வக்பு சபைக்கான அங்கத்தவர்களை நியமிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. முதலாவது வக்பு சபை மூன்று வருடங்களுக்கு 1957 ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி வரை பணிபுரிய கௌரவ உள்நாட்டு விவகார அமைச்சர் ஏ.பி.ஜயஸூரியவால் நியமிக்கப்பட்டது.

இந்த சபையின் அமைப்பு பின்வருமாறு இருந்தது. ஜனாப். எம்.ஜே.எம். முஹுஸீன் - தற்காலிக ஆணையாளர். ஜனாப். எம்.ஐ.எம்.ஹனிபா ஜனாப்.ஐ.ஏ.காதர் ஜனாப்.ஏ.ஆர்.எம்.தாஸிம் ஜனாப்.எம்.எம்.ஸுல்தான். மௌளவி. அலவி அபுல் ஹஸன். ஜனாப்.முஹம்மத் ஜமீல். ஜனாப்.ஜய்னுர் அஹ்மத். முதலாவது சபை கூட்டம் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி புதிய அலுவலகத்தில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் உரை நிகழ்த்தியதோடு அதில் அவரது நிரந்தர செயலாளரும் சமூகமளித்திருந்தார். இரண்டாவது வக்பு சபை 1959 ஆம் ஆண்டு 22 ஆம் திகதி முதல் 1960 ஆம் ஆண்டு 31 ஆம் திகதி வரை பின்வரும் அங்கத்தவர்களை கொண்டமைந்திருந்தது. ஜனாப்.எம்.இஸட்.மொஹிதீன் உஉள ஆணையாளர். ஜனாப்.ஏ.ஸீ.எம்.உவைஸ். ஜனாப்.ஐ.ஏ.காதர். ஜனாப்.ஏ.சின்னலெப்பை. மௌலவி. அலவி அபுல் ஹஸன். ஜனாப்.முஹம்மத் ஜமீல். ஜனாப்.ஜய்னுர் அஹ்மத். மூன்றாவது வகுபு சபை 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் திகதி தொடக்கம் 1963 ஆம் ஆண்டு 26 ஆம் திததி வரை இயங்கியது.

இதன் அங்கத்தவர்களாக செயல்பட்டவர்கள். ஜனாப்.எம்.இஸட்.மொஹிதீன் உஉள -ஆணையாளர். ஜனாப்.அபுதாஹிர். எம்.எம்.ஹலால்தீன். ஜனாப்.எம்ஆர்.தாஸீம். மௌளவி. அலவி அபுல் ஹஸன். ஜனாப்.எம்.டீ.ஜெய்னுதீன். எஸ்.எம்.ஏ.ஜமால்தீன். ஜனாப்.ஏ.ஆர்.எம்.ஹமீம். 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திணைக்களம் கொள்ளுபிட்டியில் செயல்பட்டது. அதன் தபால் பெட்டி இலக்கமாக 543 இருந்தது.

1963ஆம் ஆண்டு பகுதியில் வக்பு சபை பின்வரும் அங்கத்தவர்களை கொண்டிருந்தது. ஜனாப்.எம்.இஸட். மொஹிதீன் (முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் தர்ம நிதிய சொத்துக்களுக்கான பரிபாலன ஆணையாளர்) ஜனாப்.எம்.எப்.ஏ.ஜவாத். ஜனாப்.எம்ஆர்.தாஸீம். ஜனாப்.ஏ.ஆர்.எம்.ஹமீம். ஜனாப்.எஸ்.ஏ.ஹமீத். ஜனாப்.எம்.ஏ.எம்.ரஹீம். ஜனாப்.டீ.எம்.எஸ்.மஹ்மூத். 1958 ஆம் ஆண்டு, சட்டம் அமுலாகி இரண்டு வருடங்களே நிறைவுற்ற நிலையில், அதனை அமுல் படுத்தலில் காணப்பட்ட பிரச்சினைகள் காரணமாக சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டிய தேவை உணரப்பட்டது.

அன்றைய ஆணையாளர் இத்திருத்தங்களுக்கான சட்டவரைவுகளை மேற்கொண்டதன் விளைவாக 1962 ஆம் ஆண்டுக்கான 21 ஆவது இலக்க வக்பு சட்டவாக்கம் அமுலாகியது.

அதன் பின்னர் 1982 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 33 ஆம் இலக்க வகுபு திருத்தச்சட்டம் மேலும் பல திருத்தங்களை அமுலாக்கியதோடு வக்பு விசாரனை சபை ஒன்றையும் நிறுவ வழிசெய்தது. இந்த வக்பு விசாரனை சபை வக்பு சபை உத்தரவுகளை ஒட்டிய மேல் முறையீடுகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்டது. அத்தோடு ஆணையாளரின் பதவி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக பணிப்பாளர் மற்றும் உதவி பணிப்பாளர் பதவிகள் அமைவாகின. மேலும் பணிப்பாளர் வக்பு சபைக்கு தலைவராக வரும் மரபும் நீக்கப்பட்டது.

1970 இல் வக்பு சபைக்கான பிரத்தியேக பிரிவு ஸீ 47, கெபடிபொல என்ற முகவரியில் நிறுவப்பட்டது. 1989 முதல் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் கொழும்பு 2 இல் மலேவீதியில் 34 ஆம் இலக்கத்தில் செயல்பட ஆரம்பித்தது.

அதன் பிறகு திணைக்களம் இலக்கம் 180, டி.பி.ஜாயா வீதியிலுள்ள அதனது சொந்த முகவரியில் 2004 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி முதல் செயல்பட்டு வந்து தற்போது புதிய கட்டிடத்திற்கு மாறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -