விசேட அபிவிருத்தி சட்டமூலம் திருத்தப்பட்ட பின்னரே தீர்மானிப்போம் - கிழக்கு மாகாண சபை

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர்
விசேட அபிவிருத்தி தொடர்பான சட்டமூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் திருத்தப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் கிழக்கு மாகாண சபை தீர்மானிக்கும். என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

விசேட அபிவிருத்தி தொடர்பான சட்டமூலம் இன்று மாகாண சபையில் வாக்கெடுப்புக்கு விடப்படவிருந்த நிலையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மாகாண சபையில் உரையாற்றுகையில் இதனைக் கூறினார்மு தலமைச்சரின் கருத்துக்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக தமது ஆதரவை தெரிவித்தனர்.

 அத்துடன் மாகாண சபைகளின் அதிகாரங்களை பறித்தெடுக்கும் வகையில் முன்வைக்கப்படும் எந்தவொரு சட்டமூலத்திற்கும் கிழக்கு மாகாண சபை ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த சட்டமூலத்தை திருத்ததுடன் முன்வைக்கும் பட்சத்தில் அது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்

அத்துடன் மாகாணங்களின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் மாகாண சபைகளையும் இணைத்துக்கு கொண்டு அபிவிருத்திகளை முன்னெடுக்க விசேட அபிவிருத்தி சட்டமூலம் ஊடாக அரசாங்கம் தீர்மானத்தால் அதனை வரவேற்கத் தயாராகவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் கூறினார்.

எவ்வாறாயினும் அரசியலமைப்புத் திருத்தமொன்று இடம்பெற்றுவரும் நிலையில் இவ்வாறானதொரு சட்டமூலத்தின் அவசியம் குறித்தும் மாகாண சபை உறுப்பினர்கள் கேள்வியெழுப்புவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்,

அரசியல் அமைப்புத் திருத்தத்தின் ஊடாக சகல இனங்களுக்குமான சுபீட்சமிக்க தீர்வொன்றை வழங்குவதன் ஊடாகவும் மாகாண சபைகளுக்கு நியாயமாக வழங்க வேண்டிய அதிகாரங்களை உறுதிப்படுத்துவதன் ஊடாக மாகாணங்கள் தானாகவே அபிவிருத்தியடைந்து விடும் என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்,

எனவே உத்தேச அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் ஊடாக மாகாணங்களின் அதிகாரங்கள் வலுப்படுத்தப்படுவதுடன் உத்தேச தேர்தல் முறைமையில் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவமுறைக்கு பாதகம் ஏற்படாத வகையில் வழிவகைகள் செய்யப்பட்டு சிறுபான்மை மக்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குரியாகாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்,

அத்துடன் யுத்ததால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்களுள் ஒன்றான கிழக்கு மாகாணம் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி தமது மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு கூடுதல் நிதியினை வழங்க வேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -