அஷ்ரப் .ஏ.சமத்-
மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சர் பைசா் முஸ்தபா தனது அமைச்சில் (2) ஊடகவியலாளா் மாநாடொன்றை நடாத்தினாா். உள்ளுராட்சிச் தோ்தலில் விருப்பு வாக்குமுறையில்லாது வட்டார வாக்குமுறை நடாத்துவதற்கும் நாட்டில் உள்ள சகல உள்ளுாராட்சி எல்லை நிர்ணயம் சம்பந்தமாக 5 பேர் கொண்ட ஒரு குழு பிரதம மத்திரியின் தலைமையில் நியமிக்கப்பட்டது.
இவ் அறிக்கை தன்னிடம் கையளிக்கப்பட உள்ளது. என தெரிவிக்கப்பட்டே ஊடகவியலளாா்களும் அழைக்கப்பட்டிருந்தனா். இங்கு கருத்து தெரவிரிவித்த அமைச்சா் :-
சற்று முன்னா் தான் இந்த அறிக்கையைப் பெற்றுக் கொள்வதற்காக நானும் தாய் தகப்பன் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு மக்கா நகருக்கு உம்ரா கடமைக்குச் சென்று இடை நடுவில் விட்டு விட்டு இங்கு ஓடிவந்தாகவும் தெரிவித்தாா். இந்த அறிக்கை இன்று பெறுவதற்காகவே இன்று வந்து இறங்கினேன். ஆனால் இந்த அறிக்கையின் குழுவி்ல் 3 பேரே கையெழுத்திட்டுள்ளனா். மிகுதி இருவரும் இன்னும் கையெழுத்திட வில்லை. ஆகவே இவ் அறிக்கையை தன்னால ஏற்றுக் கொள்ள முடியாது. என அமைச்சா் ஊடகவியலாளாிடம் தெரிவித்தாா்.
தான் அறிக்கை பெற முன்னா் வெளிநாடு ஓடிவிட்டதாகவும் சில அரசியல் வாதிகள் அவதுாறுகளை தனக்குத் தெரிவித்துள்ளனா், அதுமட்டுமல்ல இந்த அறிக்கை காலம் தாழ்த்தவதற்கும் தானே காரணம் என இவ் அறிக்கையின் தவிசாலாளா் அசோக்கா லங்கா தீப பத்திரிகையில் நேற்று தெரிவித்துள்ளதாகவும் அமைச்சா் தெறிவித்தாா்.
இவ் அறிக்கைக் குழுவின் தலைவா் முன்னாள் செயலளாா் அசோக்க தெரிவிக்கையில் ஜ.தே.கட்சி, மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சியினால் நியமிக்கப்பட்ட உறுப்பிணா்கள் இந்த அறிக்கையை வாசிக்காமல் தங்களால் கையெழுத்திட முடியாது எனத் தெரிவித்துள்ளதாக தெரிவித்தாா். இருந்து கூடுதலானா் 3 உறுப்பிணா்கள் கையெழுத்திட்டுள்ளோம் எனவும் தெரிவித்தாா்.
இவ் அறிக்கை விடயத்தில் மீண்டும் பிற்போட்டு உள்ளுராட்சித் தோ்தல் விடயத்திலும் காலம் தாழ்த்தவோ அல்லது வேறு சில திருத்தங்களை உட்புகுத்துவதற்கோ மேற்படி நாடகமா என ஊடகவியலாளா்கள் கேள்வி எழுப்பினாா்கள்.