வாகரை முச்சக்கர வண்டி சாரதிகள் பிரச்சினைகளை தீர்க்க விரைந்த ஷிப்லி



வாகரை - கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட கேணிநகர் மற்றும் ஆலங்குளம் கிராமங்களிலுள்ள முச்சக்கர வண்டிகளை வைத்து தங்களது தொழில்களை மேற்கொண்டு வரும் 17 முஸ்லிம், தமிழ் ஆட்டோ சாரதிகள் ஒன்றிணைந்ததாக வாகரை - புதிய நகர் ஐக்கிய முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் எனும் பெயரில் ஒன்றினை உருவாக்கி தங்களது தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இவர்களுக்கென்று முச்சக்கர வண்டி தரிப்பிடம் கிடைக்கப் பெற்றதோடு அன்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நஸீர் அஹமட் அவர்களினால் உத்தியோக பூர்வமாகவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவர்களுக்கான ஆட்டோ தரிப்பிடம் வழங்கும் நிகழ்வில் தவிர்க்க முடியாக காரணங்களினால் கலந்துகொள்ள முடியாமல் போன கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களை கௌரவப்படுத்தும் முகமாக வாகரை - புதிய நகர் ஐக்கிய முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினர் 2017.01.22 - ஞாயிற்றுக்கிழமை மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களை அழைத்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

வாகரை - புதிய நகர் ஐக்கிய முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ். காதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆட்டோ சங்க செயலாளர் கோபாலபிள்ளை மற்றும் ஆட்டோ சங்க உறுப்பினர்கள், கேணிநகர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர் ஹுசைன் (ஜே.பீ.) மற்றும் மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் ஹைதர் அலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கடந்த 2016.11.09ஆந்திகதி - புதன்கிழமை இக்கிராமங்களுக்கு விஜயங்களை மேற்கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆகியோரிடம் தங்களுக்கென்று முச்சக்கர வண்டிகளை தரித்து வைத்து தொழில்களை மேற்கொள்வதற்கு தங்களுக்கென்று நிரந்தர முச்சக்கர வண்டி தரிப்பிடம் இல்லாமால் சிரமப்படுவதாகவும் தங்களுக்கென்று ஒரு முச்சக்கர வண்டி தரிப்பிடத்தைப் பெற்றுத்தருமாறும் முச்சக்கர வண்டி சாரதிகள் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தனர். 

இதன்பயனாக மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கொண்ட முயற்சியின் பயனாகவும், மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நஸீர் அஹமட் அவர்களின் பூரண ஒத்துழைப்புடனும் இவர்களுகென்று வாகரை - பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட ஆலங்குளம் சந்தி, ரகுமானிய்யா வீதி மற்றும் RDS கட்டடம் போன்ற இடங்களில் முச்சக்கர வண்டிகளுக்கான தரிப்பிடம் வழங்கப்பட்டு 2017.01.15 - ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -