எல்லை நிர்ணய குழு தயாரித்துள்ள அறிக்கையை ஏற்க மறுத்த பைஸர் முஸ்தபா

எல்லை நிர்ணய குழு தயாரித்துள்ள அறிக்கையை அதன் தலைவர் அசோக பீரிஸ் இன்று உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளித்தார். எனினும் குழுவின் இரண்டு உறுப்பினர்கள் அந்த அறிக்கையில் கையெழுத்திடவில்லை என்ற காரணத்தினால், அமைச்சர் அறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் நியமிக்கப்பட்ட சாலிய மெத்தியூ, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி எஸ்.மிஸ்பா ஆகியோரே அறிக்கையில் கையெழுத்திடவில்லை. குழுவின் தலைவர் அசோக பீரிஸ், மக்கள் விடுதலை முன்னணி நியமித்த சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியமித்த பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை உட்பட ஏனைய உறுப்பினர்கள் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் அரசாங்கம் எல்லை நிர்ணய அறிக்கையை காரணம் காட்டி உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தி வரும் நிலையில், அமைச்சர் உறுப்பினர்கள் கையெழுத்திடவில்லை எனக் கூறி அறிக்கையை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -