ஆறு கோடி ரூபா நிதியின்மூலம் ஏறாவூர்ப்பிரதேசத்தில் பதினான்கு வீதிகள் புரனரமைப்பு




ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்-

பெருந்தெருக்கல் அமைச்சின் ஆறு கோடி ரூபா நிதியின்மூலம் மட்டக்களப்பு- ஏறாவூர்ப்பிரதேசத்தில் பதினான்கு வீதிகளுக்கு தார் இட்டு புனரமைக்கும் பணிகள் ஒரே நாளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இவ்வேலைத்திட்டத்தினை அங்குரார்ப்பணம் செய்தார்.

ஏறாவூர்ப்பிரதேசத்தில் மிச் நகர் மற்றும் ஐயன்கேணி ஆகிய கிராமப்புற வீதிகள் இத்திட்டத்தில் தார் இட்டு செப்பனிடப்படுகின்றன.

இந்த வீதிகள் கடந்த பல தசாப்த காலமாக புனரமைக்கப்படாது குன்றும் குழியும் நிறைந்த கிரவல் தரையாகக் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வீதிப்புனரமைப்புப்பணி ஆரம்ப நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட நிறைவேற்றுப் பொறியியலாளர் எஸ் சசிநந்தன் ஏறாவூர் நகர் பிரதேச உதவிச் செயலாளர் ஏசிஎப் றமீஸா மற்றும் நகர சபையின் முன்னாள் தவிசாளர் எம்ஐஎம் தஸ்லிம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை இவ்வேலைத்திட்டத்த்pனை முன்னெடுக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -