பட்டதாரிகள் தொடர்பில் அன்வரின் அவசரப் பிரேரணை நாளை

எப்.முபாரக்-

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வரினால் நாளை(24) செவ்வாய் கிழமை இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின்போது கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரி ஆசிரியர்களை கிழக்கு மாகாண பாடசாலைகளில் காணப்படும் 1134 ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆசிரியர்களை நியமிப்பதற்கான போட்டிப்பரீட்சை கிழக்கு மாகாண பொது சேவைகள் ஆணைக்குழுவினால் கடந்த 01.08.2016 விண்ணப்பங்கள் கோரப்பட்டு சுமார் 5701 பட்டதாரிகள் தோற்றியிருந்தனர். இதில் 16.01.2017 வெளியிடப்பட்ட 40 புள்ளிகளுக்குமேல் பெற்ற சுமார் 305 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். 

மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களை அமைவாக ஏனைய மாகாணங்களான வட,வடமத்திய,வட மேல் மாகாணங்களில் 30 அல்லது 35 ஆக வெட்டுப்புள்ளியாக குறைத்து உள்ளீர்க்க கோரியும் அதன் மூலம் மாகாண பாடசாலைகளில் இன்னும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க கோரி அவசர பிரேரணை ஒன்றை முன் வைக்கவுள்ளதாகககிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -