சுத்தமான நகரம்' ஏறாவூரில் பொலிஸார் படையினர் இணைந்து துப்புரவுப் பணி





ஏ.எச்.ஏ. ஹுஸைன்- 

னாதிபதியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தையொட்டி மாவட்டம் தழுவிய ரீதியில் இடம்பெறும் 'சுத்தமான நகரம்' எனும் வேலைத் திட்டத்தில் ஏறாவூர் நகர பிரதான நெடுஞ்சாலை மருங்குகளை சுத்தம் செய்யும் செயற்திட்டத்தில் பொலிஸாரும் படையினரும் இணைந்து பங்கெடுத்துள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவினால் ஏறாவூர் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸின் நெறிப்படுத்தலில் இந்த செயற்திட்டம் வியாழக்கிழமை (26.01.2017) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முதற்கட்டமாக ஏறாவூர் நகரின் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை மருங்குகளில் வடிகான்கள், மதகுகள், கவனிப்பாரற்ற பாழடைந்த கட்டிடங்களின் பகுதிகள் என்பன சுத்தம் செய்யப்பட்டன.

இந்த 'சுத்தமான நகரம்' செயற்திட்டத்தில் ஏறாவூர் பொலிஸ் சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவினர், இலுப்படிச்சேனை படை முகாமிலுள்ள இராணுவத்தினர் உள்ளிட்டோரும் சுகாதாரத் திணைக்களத்தினரும் பங்குபற்றியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -