ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பாயிஸின் நினைவு கூட்டமும் நூல் வெளியீடும்.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் பொருளாளரும் ஊடகவியலாளருமான மர்ஹூம் எச்.எம்.பாயிஸ் அவர்களின் நினைவு கூட்டமும் பாணந்துறை, அகமதி மகளிர் மஹா வித்தியாலய மாணவி எம்.ஏபாத்திமா இஸ்ரா சிங்களத்தில் எழுதிய 'ஹொதம மிதுரா' என்ற சிறுவர் கதை நூலின் வெளியீட்டு விழாவும் எதிர்வரும் 2017. 01. 20ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை 4.00 மணிக்கு இலக்கம் 149, மாளிகாகந்தை வீதி, மருதானை, கொழும்பு 10லுள்ள அஷ்ஷபாப் கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.

போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வணித்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகவும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும் மொழிகள் அமைச்சர் மனோ கனேசன், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் அஷூ மாரசிங்க, முஜீபுர் ரஹ்மான் மற்றும் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

சிங்கள மொழிமூலம் கற்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு இஸ்லாம் பற்றிய தெளிவை வழங்கும் நோக்கில் மாணவி பாத்திமா இஸ்ராவினால் எழுதப்பட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் பணிபுரியும் ஊடகவியாலாளர் துசல் வித்தானகேயினால் வெளியிடப்பட்டுள்ள 'ஹொதம மிதுரா' என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வே இதன் போது இடம்பெறவுள்ளது. நூலின் முதல் பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக் கொள்ளவுள்ளதுடன் மேலும் முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
ஸாதிக் ஷிஹான்,
பொதுச் செயலாளர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -