பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் ஜனநாயக போராளிகள் கட்சியின் அமைப்பாளர் துக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (1) இரவு இடம்பெற்றுள்ளதுடன் இறந்தவர் விடுதலை புலிகளின் முன்னாள் முக்கிய உறுப்பினராவார்.
இயக்க பெயரில் இனியவன் என அழைக்கப்படும் குறித்த முன்னாள் உறுப்பினர் ஜனநாயக கட்சியுடன் இணைந்து கடந்த காலங்களில் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சடலம் குறித்த கட்சி அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளதாகவும் நீதிவான் சடலத்தினை பார்வையிட்டதன் பின்னரே சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்படவுள்ளது.
அத்துடன் இறந்தவரின் சடலம் ஜனநாயக போராளிகள் கட்சி அலுவலகத்திலிருந்து மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஜனநாயக போராளிகள் கட்சி ஆனது கடந்த மாகாண சபை தேர்தல் முதல் இன்று வரை முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் சிலர் இணைந்து உருவாக்கிய கட்சியாகும்.
