மாளிகைக்காடு சபீனாவில் வித்தியாரம்பம்; புதிய மாணவர்கள் கல்விக்கு அத்திவாரம்.!

எம்.வை.அமீர் -
ல்வி அமைச்சின் சுற்றுநிருபத்துக்கு அமைவாக அரச பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு புதிதாக இணைந்துகொண்ட மாணவர்களை பாடசாலையோடு இணைக்கும் வித்தியாரம்ப விழா நேற்று (11)அகில இலங்கை ரீதியாக அனைத்து பாடசாலைகளிலும் இடம்பெற்றது.

கல்முனை வலய மட்ட வித்தியாரம்ப விழா மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இன நல்லுறவிற்கான தேசிய வேலைத் திட்டத்தின் தலைவரும்,மார்க்க ஒப்பீட்டுஆய்வாளரும்,சமூக சிந்தனையாளருமான அஷ்ஷெய்க்.அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவப் பிஞ்சுகளுக்கு ஏடு துவக்கி அகரம் எழுத வைத்து பரிசில்கள் வழங்கியமை சிறப்பாய் அமைந்தது.

மேலும் இந்த விழாவில் கல்வியதிகாரி பரதன் கந்தசாமி, மூத்த கல்விமானும் சட்டத்தரணியுமான எம்.சி.ஆதம்பாவா, பிரபல வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளரும்,கல்விமானுமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் பலர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வுகளில் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

லண்டனில் வசிக்கும் றிபாய் ஜவ்பர் மற்றும் கட்டாரில் வசிக்கும் எம்.எச்.எம்.றியாஸ் ஆகியோர் மாணவர்களுக்கு பாடசாலை பாதணிகள், புத்தக பைகளை வழங்கி வைத்தனர்.

இத்துடன் இந் நிகழ்வின் பிரதம அதிதி இன நல்லுறவிற்கான தேசிய வேலைத் திட்டத்தின் தலைவரும்,மார்க்க ஒப்பீட்டு ஆய்வாளரும்,சமூக சிந்தனையாளருமான அஷ்ஷெய்க்.அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்கள் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் பாடசாலைக்கு அலுவலக தளபாடங்களை அன்பளிப்பு செய்தமையும் நேற்றைய நிகழ்வின் முத்தாய்ப்பான விடயமாகும்.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -