முஸ்லிம் சமயம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கான கட்டிடம் இன்று ஜனாதிபதியால் திறக்கப்படவுள்ளன.

முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சின் கீழ் அமைந்துள்ள முஸ்லிம் சமயம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கான புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 600 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் 4.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனலினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திhpபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார். 

இதில் முஸ்லிம் சமய கலாசாம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம், பிரதி அமைச்சர் மற்றும் வெளிநாட்டு தூதுவராலயங்களின் தூதுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

2006 ஆம் ஆண்டு அளவில் சமய விவகார பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவின் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு நீண்ட காலமாக நிறைவு செய்யப்படாமல் இருந்தது. அமைச்சர் ஹலீமின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தக் கட்டிட நிர்மாணப் பணிகளுக்கு புதிய அரசாங்கத்தின் மூலம் நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்கவினால் 297 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தமாக 600 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சுகல வசதிகளுடன் ஒன்பது மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கட்டிடத்தில் முஸ்லிம்களுடைய கலசாசார அலுவலக சகல பிhpவுகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. கேட்போர் கூடம், வக்கு சபை, உள்ளிட்ட பொது மக்கள் சிரமங்களின்றி தங்களுடைய கலாசாரங்களுடன் தொடர்புடைய தேவைகளை இலகுவான முறையில் நிறைவு செய்து கொள்ள முடியுமான வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். எச். எம். ஸமீல் தொpவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -