".திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்வு" அமைச்சர் நஸீர்.

அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், கே.புஸ்பகுமார
அபு அலா- 
ம்பாறை மாவட்ட, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கி வந்த திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று (24) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த பல வருட காலமாக மாவட்ட வைத்தியசாலையாக இயங்கி வந்த இந்த வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தித் தரவேண்டும் என்ற வேண்டுகோளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.புஸ்பகுமார மற்றும் குறித்த பிரதேச மக்கள் வேண்டிக்கொண்டமைக்கமைவாகவே இந்த மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டது. 

அற்கமைவாக குறித்த வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் அதற்கான வர்த்தக மாணி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மேலும் தெரிவித்தார். 

குறித்த வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு முன்னின்று உழைத்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் அவர்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.புஸ்பகுமார தனது தனிப்பட்ட வாழ்த்தினையும் திருக்கோவில் மக்கள் சார்பிலும் தனது வாழ்த்தினையும், நன்றியினையும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -