காத்தான்குடி ஊர் வீதி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரி சந்தியின் அவலம்





பழுலுல்லாஹ் பர்ஹான்-
ட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட பழைய கல்முனை -காத்தான்குடி ஊர் வீதி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரின் முன்பாக காணப்படும் சந்தியின் ஊடாக செல்லும் வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனால் இவ் வீதியில் பயணம் பொது மக்கள்,பாடசாலை மாணவர்கள்,அறபுக் கலாசாலை மாணவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

தற்போது மழை காலம் என்பதால் காத்தான்குடி பிரதான வீதியில் இருந்து வடிகான் மூலம் காத்தான்குடி அறபுக் கலாசாலை வீதி ஊடாக (குறிப்பாக இரவு நேரங்களில்) இந்த வீதியில் மழை நீர் ஓடும் பொழுது வீதியில் பயணிப்போர் மேற்படி வீதியின் குழிகளில் விழுவதற்கும், வடிகான்களின் மூடிகள் சேதடைந்து காணப்படுவது தெரியாமல்; வடிகான்களின் குழியில் விழுவதற்கும்,வீதி விபத்து இடம்பெறுவதற்கும் பெரிதும் வாய்ப்பாக மாறியுள்ளது.

மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குறித்த ஊர்வீதியின் ஒரு பகுதி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஊர்வீதி விஸ்தரிப்பு பணிகளின் போது புனரமைப்பு செய்யப்படாமல் விடப்பட்டதன் காரணமாகவே இவ் வீதி குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.

இவ் வீதி புனரமைப்பு தொடர்பில் சம்மந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள்,அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -