இரண்டு வருடங்களில் ஜனாதிபதியின் பெரும் வெற்றியளித்த திட்டங்கள்..!

 அஷ்ரப் ஏ சமத்-
னாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியாக பொருப்பேற்று இரண்டு வருடங்களில் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி விசேட செயலணியின் போதைப்பொருள் மதுசாரம், ஒழிப்புத்திட்டம், வன வளம் மற்றும் சூழல் பாதுகாப்பு, விவசாய உற்பத்தி, போசனை, மற்றும் சிறுநீரக நோய் தடுப்பு போன்ற துறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2 வருடங்களாக சம்பந்தப்பட்ட திட்டத்தில் ஜனாதிபதியின் கீழ் அமைச்சுக்கள் மற்றும் அரச தணியாா் நிறுவனங்கள் இணைந்து இவ் செயலணியை செயற்படுத்தி வருகின்றன. இத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வெற்றியளித்து வரும் திட்டங்களாகும். என இன்று (4) தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டில் மேற்படி திட்டங்களது ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றும் பணிப்பாளா்கள் மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தாா்கள். 

இவ் ஊடக மநாட்டில் ஜனாதிபதி செயலகத்தின் விவசாய உற்பத்தி சம்பந்தமான பணிப்பாளா் விஜயரத்தின சாகல தகவல் தருகையில் -

இலங்கையில் 200 பில்லியன் ரூபாவுக்கு அதிகமான வெளிநாட்டு உணவு உற்பத்திக சிறுகச் சிறுக குறைக்கப்படும். இலங்கையில் விவசாய உற்பத்திகள் அதிகரிக்கப்படும் , கால் நடைகள், மற்றும் சுகாதார தரத்திற்கு ஏற்ற முறையில் போசாக்கு உற்பத்திகளையும் அதிகரிக்கும் திட்டம் விவசாயிகள் மத்தியில் வெற்றியளித்து வருகின்றன. 

இத் திட்டங்கள் 2020ஆம் ஆண்டாகும் போது இலங்கையில் இறக்குமதி செய்யும் அரிசி, பால்மா உட்பட பல உணவுகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது குறைக்கப்படும். தமது மக்களுக்கேற்ப இலங்கையில் விவசாய உற்பத்திகள் அடையாளம் காணப்பட்டு அதனை உற்பத்தியாக்குவதற்கு 200க்கும் மேற்பட்ட உப உணவுகள் உற்பத்தி செய்யபபடும். தற்பொழுது இத்துறையில் 35 ஆயிரம் விவசாய குடும்பங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. கடந்த வருடம் பண்டாரநாயக்க ஞாபகாாத்த மண்டபத்தில் நடாத்திய உள்ளுராா் உற்பத்திகள் கண்காட்சிக்கு மட்டும் 7 இலட்சம் மக்கள் பங்குபற்றி அங்கு காட்சிப்படுத்தபட்ட விவசாய துறைகள் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. 

விவசாய உற்பத்தித்துறையில் இளைஞா்கள் 25ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவா்களுக்கு நாளாந்தம் 1000 லீட்டர் பாலை அவா்களுக்கு உற்பத்தி செய்யக் கூடிய வகையில் மாணிய அடிப்படையில் கால்நடைகள், மற்றும் விவசாய உற்பத்திகள் மீன்பிடிததுறை சாா்ந்த தொழில்களில் ஈடுபடுத்தக் கூடிய வசதிகள் செய்யப்பட உள்ளன. அத்துடன் 200க்கும் மேற்பட்ட விதைகள், பயிா்களை நடும் இயந்திரங்களும் இவா்களுக்கு வழங்கப்பட உள்ளன. 

இம்முறை 50ஆயிரம் கெக்டயா் உற்பத்திகளை விளைச்சலுக்காக செயல்படுத்த இருந்தும் தற்போதைய இயற்கை காலநிலை மாற்றத்தினால் இத்திட்டம் பிற்போடப்பட்டது. எதிா்வரும் அடுத்த போக பயிர்ச்செய்கை காலத்தில் இத்திட்டங்கள் நடைமுறபை்படுத்தப்படும்.

வனவள சூழல் திட்டப்பணிப்பாளர் வைத்தியா் உபாலி இந்திரசிரி தகவல் தருகையில் -

அண்மையில் ஜனாதிபதி தலைமையைில் கூடிய விசேட அணி இந்த நாட்டில் உள்ள சகல வன, மற்றும் வளங்கள், ஜீவராசிகளை பாதுகாப்பதற்காக பாரியதொரு திட்டமொன்றை வகுத்துள்ளது. இந்த நாட்டில் பொலித்தீன் மற்றும் றெஜீபோம் உற்பத்திகளை இல்லாதொழித்தல், வன வளங்களை நாசப்படுத்துவோா் வன நிலங்களை அபகரித்து அதில் நிர்மணாப்பணிகளை மேற்கொள்பவா்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கபடுவாா்கள், அதனைக் காண்காணிப்பதற்காக ஊடகவியலாளா்கள், ஜனாதிபதி அலுவலக அணி, மற்றும் சூழல் அதிகார சபையின் அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

வில்பத்து அண்மைய விடயங்களைக் கூட இந்த குழுவினா் ஜனாதிபதியிடம் அறிக்கை சமா்ப்பிப்பாா்கள். அத்துடன் பாதுகாப்பு படையினா் இதில் ஈடுபடுத்தப்பட்டு இலங்கையின் இயற்கை வளங்கள், வனங்கள் ஜீவராசிரிகள் பாதுகாப்பதற்கு ஒரு சீரான திட்டம் வகுக்கப்பட்டு வருகின்றது.

மது மற்றும் போதைப்பொருள் சம்பந்தமான திட்டப் பணிப்பளாா் வைத்தியா் சமன்த சில்வா தகவல் தருகையில் -

இலங்கையில் 2016ஆம் ஆண்டில் - 390 கிலோ போதைப்பொருளும், கொக்டைன் 1499 கிலோவும், கேரலா கஞ்சா 1963 கிலோவும் இலங்கையின் பாதுகாப்பு படையினா், மற்றும் பாதுகாப்பு ஒட்டு சேவையினா் கடற் படையினா் சுங்கத்திணைக்கள அதிகாரிகளுடன் சோ்ந்து கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவா்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனா். இந்த நாட்டில் மதுபாவனை மற்றும் புகைத்தல் ஒழிப்பு போன்ற விடயங்கள் 2020ஆம் ஆண்டு வரையில் 50 வீதமாவாது ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க்பபட்டு வருகின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரதேச செயலளாா் பிரிவுலும் இளைஞா்கள், பாடசாலை மாணவா்கள், பல்கலைக்கழக மாணவா்கள் இத்துறை சாா்ந்த விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டு நாடுபுராவும் போதைப்பொருள் ஒழிப்புக்காக இவா்கள் செயல்பட்டு வருகின்றனா். ஏற்கனவே போதைப்பொருள் மது பாவனையாளா்கள் 25 ஆயிரம்போருக்கு புனா்த்தாபணம் செய்யப்ட்டுள்ளது. இவ் வருடம் 50ஆயிரம் பேர் புனா்த்தாபணம் செய்வதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -