கொழும்பு ஏ.ஈ.குணசிங்க வித்தியாலயம் திறந்து வைப்பு - படங்கள்

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான முஜீபுர் ரஹ்மானின் மறுமலர்ச்சி பெறும் மத்திய கொழும்பு எனும் கருத்திட்டத்திற்கு அமைய அல்-கபாலா நிறுவனத்தின் முழுமையான நிதி உதவியினால் பழுதடைந்திருந்த கொழும்பு-12 ஏ.ஈ.குணசிங்க வித்தியாலயத்தை முற்றாக மறசீரமைப்புச் செய்யப்பட்டு மேல்மாகாண கல்வி, கலை, கலாச்சார, விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச வினால் இன்று (16) திறந்து வைக்கப்பட்தது.

இவ்வித்தியாலயத்தில் ஆண்டு ஒன்றுக்கு புதிய மாவர்கள் 55 பேர் இணைத்துக் கொள்ளப்பட்ட நிகழ்வோடு இந்தப்பாடசாலை சிங்கள மொழி மூலம் மாணவிகள் கல்வி கற்பதற்கும் இதனை ஒரு பெண்கள் பாடசாலையாகவும் மாற்றி பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் திருமதி ஆர்.எம்யு.ரத்நாயக்கவின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதமத அதிதியாக மேல்மாகாண கல்வி,கலை,கலாச்சார, விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச கலந்து கொண்டதுடன் கௌர அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானும், விஷேட அதிதிகளாக மேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், அர்ஷாட், பைரூஸ் ஹாஜியார், கொழும்பு வலயக் கல்விப் பணிமனையின் பணிப்பாளர் ஜெயந்த விக்ரமநாயக்க, அல்-ஹிக்மா கல்லூரியின் அதிபர் கே.எம்.எம்.நாளிர், அல்-கபாலா நிறுவனத்தின் தலைவர் யு.ஏ.நஜீம், மதத் தலைவர்கள், மத்திய, மாகாண சபை அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -