கல்முனை ஜவாதைப் பற்றி பொய்யான கருத்துக்கள் கூறவேண்டாம் – அமைச்சர் நஸீர்


சப்னி அஹமட், அபு அலா-

ட்டாளைச்சேனைக்கு வழங்கப்படவுள்ள தேசியப்பட்டியலை அட்டாளைச்சேனைக்குவழங்கவிடாமல் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.அப்துல் ரசாக் (ஜவாத்) ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் கடந்த 02.01.2017ஆம் திகதி நடைபெற்ற உயர்பீட கூட்டத்தில்பேசியதாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியான செய்திகளில்எவ்விதமான உண்மையும் இல்லை என கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் ஏ.எல்முஹம்மட் நஸீர் இன்று (09) தெரிவித்தார்.

அட்டாளைச்சேனைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரசின் தலைவரினால் கடந்த பாராளுமன்ற தேர்தல் காலங்களின் போது அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் உறுப்பினர் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட விடயம் தொடர்பில் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாயல் நிருவாகத்தினருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனைபிரதேசத்தில் உள்ள உயர்பீட உறுப்பினர்களுக்குமிடையிலான கலதுரையாடலின் போதேஅமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து கூறுகையில்;

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர்ஸின் தலைவரினால் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கானவாக்குறுதியளிக்கப்பட்டவாறு அம்பாறை மாவட்டத்திற்கு தேசியப்பட்டில் வழங்குவதாக இருந்தால் அது அட்டாளைச்சேனைக்கே வழங்க வேண்டும் இதை யாராலும் தடுக்க முடியாத விடயம் என அவர் அங்கு சுட்டிக்காட்டி பேசினார்.

இது தொடர்பில் பல தீர்மானங்கள் தலைவரினால் மேற்கொள்ளப்பட்டது என்று ஊடகங்களில்வெளியானாலும் அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படவுள்ள தேசியப்பட்டியலை நான்கட்டாயம் இந்த காலகட்டத்திற்குள் வழங்குவேன் என்று தலைவர் கூறியுள்ளார். தலைவரின் வாக்குறுதிப்படி கட்டாயமாக தேசியப்பட்டியல் பிரதிநித்துவத்தை அட்டாளைச்சேனைக்கு வழங்கியே ஆகவேண்டும். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

இது தனிப்பட்ட நபருக்கான தேசியப்பட்டில் அல்ல இது முழு அட்டாளைச்சேனை மக்களுக்குறிய பிரதிநித்துவமாகும் இது கடந்த 31 வருட கால கனவாகும் இதனை கட்டாயம் இப்பிரதேசத்திற்கு வழங்குவார் என்ற நம்பிக்கையுடன் அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் இன்று வரை உள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் உயர்பீட உறுப்பினர்களான எம்.ஏ. அன்ஸில் யூ.எம் வாஹிட், எஸ்.எம் ஏ கபூர், எஸ்.எல்.எம். பழீழ் பீ.ஏ அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாயல் தலைவர் செயலாளர், பொருளாலர், உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு தங்களில் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -