கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்ட அபிவிருத்திப் பணிகளுக்கு யாரும் உரிமை கோர முடியாது: ஹஸன் அலி

எம்.ஜே.எம்.சஜீத்-
கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் ஒரு பொதுவான அபிவிருத்தித் திட்டமாகும். இதனை வைத்துக்கொண்டு சிலர் அரசியல் செய்வதற்கு முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ ஹஸன் அலி குற்றம் சுமத்தியுள்ளார்.

கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்ட அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேச அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் எமது நாட்டிலுள்ள சகல கிராமங்களையும் அபிவிருத்தி செய்யும் நோக்குடன் அரசாங்கம் கிராமத்திற்கு ஒரு மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்து கிராமங்களை அபிவிருத்தி செய்து வருகிறது. குறிப்பாக கிராம மக்களினால் முன்னுரிமைப்படுத்தப்படுகின்ற தேவைகளையே இத்திட்டத்தினூடாக நிறைவேற்றிக்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறான விசேட திட்டத்தினால் அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் போது அதனைத் திறந்து வைப்பதற்கு அரசியல்வாதிகள் முன்டியத்துக்கொண்டு தங்களுடைய அபிவிருத்திப்பணிகள் போன்று சித்தரித்து அரசியல் செய்வதற்கு முயற்சிக்கின்றனர். மேலும் அவர்கள் இவ்வபிவிருத்தி திட்டப் பெயர்ப்பலகைகளில் தங்களது போட்டோக்களையும், பெயரினையும் குறிப்பிடுவதற்கும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப்பணிகளுக்கு எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல்வாதியோ உரிமை கோர முடியாது. இது அரசாங்கத்தின் பொதுவானதொரு திட்டமாகும்.; இதற்குரிய சகல உரித்தும் நல்லாட்சி அரசிக்கே உரியது. இதனை வைத்துக்கொண்டு அரசியல் இலாபம் தேடுவதற்கும் எமது பிரதேச அரசியல்வாதிகள் முற்படுகின்றனர்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் பதவியேற்று இரண்டாவது வருட பூர்த்தியினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது சம்மாந்துறை பிரதேசத்தில்; கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளும்; திறந்து வைக்கப்பட்டது.

கிரமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தினூடாக சம்மாந்துறைப் பிரதேசத்தில் சுமார் 50 கிராம சேவகர் பிரிவிலும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக மக்கள் பெரிதும் நன்மையடைந்துள்ளனர். எனவே இவ்வாறான திட்டங்களை மேற்கொண்ட நல்லாட்சி அரசாங்கத்திற்கும், அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நாம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

குறிப்பாக பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்பட்ட இவ்வபிவிருத்திப் பணிகளை ஏதோ ஒரு வகையில் திறந்து வைப்பதில் நாம் மகிழ்ச்சியடைந்தாலும், இதனை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -