கல்முனை பாலிஹா ஒழுங்கையின் அவலத்தை கண்டுகொள்வார்களா?

எம்.வை.அமீர்-
ல்முனை பாலிஹா ஒழுங்ககை மஹ்முத் மகளிர் கல்லூரியின் அருகால் செல்லும் பிரதானமான ஒழுங்கை. இவ் ஒழுங்கையால் மாணவர்கள் பாதசாரிகள் வாகனங்கள் என அன்றாடம் நெரிசல் நிறைந்த ஒழுங்கை. ஆரம்பத்தில் குன்றும் குழியுமாகக் காணப்பட்ட குறித்த ஒழுங்கை அண்மையில் மக்களின் வரிப்பணத்தைக்கொண்டு செப்பனிடப்பட்டது.

இந்த ஒழுங்கை சரியான முகாமைத்துவத்துடன் செப்பனிடப்படாததன் காரணமாக முன்பு மழைகாலங்களில் நீர் தேங்குவதைவிட இப்போது அதிகமாக நீர் தேங்கி நிற்கின்றன. இவ் அவலத்தை கண்டுகொள்ள யாருமற்ற நிலையே இப்போது நிலவுவதாக குறித்த ஒழுங்கையில் வசிப்போரும் பாதசாரிகளும் ஆதங்கப்படுகின்றனர்.

மிகப்பிரபல்யமிக்க மஹ்முத் மகளிர் கல்லூரியின் அருகில் காணப்படும் இவ்வாறான குறைகள் இங்கு கல்விகற்கும் மாணவிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் டெங்குபோன்ற நோய்கள் இப்பிரதேசத்தில் பரவ வாய்ப்புகள் ஏற்படலாம் என்று குறித்த ஒழுங்கையில் வசிப்போர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கல்முனை மாநகரசபையே! சுகாதாரத்துறை சார்ந்தோரே!! அரசியல்வாதிகளே!!! கல்முனை பாலிஹா ஒழுங்ககையின் அவலத்தை போக்க இனியாவது விரைந்து நடவடிக்கை எடுங்கள். வீதிகள் செப்பனிடுகிறோம் என்று கூறிக்கொண்டு மக்களின் வரிப்பணத்தை ஏப்பமிடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடு குறித்த ஒழுங்கையை மீண்டும் செப்பனிட நடவடிக்கை எடு என குறித்த ஒழுங்கையில் வசிப்போரும் பாதசாரிகளும் சம்மந்தப்பட்டோரை வேண்டி நிற்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -