அம்பாறை மாவட்ட மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்!






காரைதீவு நிருபர் சகா -

ம்பாறை மாவட்டத்திலுள்ள பல்லின மக்கள் எதிர்நோக்கும் காணி பிரச்சினைகள் தொடர்பாக அம்மக்களை ஒன்றிணைத்து பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை இனங்காணும் கலந்துரையாடலை மனித அபிவிருத்தித் தாபனம் நடாத்தியது.

இக்கலந்துரையாடல் நேற்று அக்கரைப்பற்று விபுலானந்தா இந்து மன்ற கேட்போர் கூடத்தில் மனித அபிவிருத்தி தாபனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந்; தலைமையில் இடம் பெற்றது.
இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்டத்திலுள்ள காணிப் பிரச்சினையை எதிர்நோக்கும் பொதுமக்கள், காணிப்பிரச்சினை தொடர்பான அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் விவசாயக்காணிகள், மேட்டுநிலப்பயிர் செய்கை காணிகள், மேய்ச்சல் காணிகள், கரும்பு செய்கை காணிகள், கரையோர பிரதேச மீனவர்களின் காணிகள், நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டம், குடியிருப்பு காணிகள், தனியார் பேமிட் காணிகள் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

அப்பிரச்சினைகளை மாவட்ட, தேசிய மட்டத்திற்கும், கௌரவ ஜனாதிபதி, பிரதமருக்கும் அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இச்செயற்பாடுகளில் உரிய தீர்வு கிடைக்காத சந்தர்ப்பத்தில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள மனித அபிவிருத்தி தாபனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.

அத்துடன் இச்செயற்பாட்டை தொடர்ச்சியாக கொண்டு செல்வதற்கு பாதிக்கப்பட்டவர்கனை ஒன்றிணைந்த செயற்பாட்டு குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவே எதிர்காலத்தில் இக்காணிப்பிரச்சினைகள் தொடர்பாக செயற்படவுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -