”பலர் மரணமான மூதூர் படகு விபத்து” நினைவுள்ளதா?

ஆஷிக் வதூத்-

24 வருடங்கள் மூதூர் மக்கள் திருகோணமலைக்கு செல்வதற்கு கடல் மார்க்கமாகவே சென்று வந்தனர்.

மூதூர் - திருகோணமலை கடல் போக்கு வரத்திற்கான தூரம் 13 கி.மீ,  13 கி.மீ தூரத்தை கடக்க 01 மணித்தியாலம் ஆழ்கடலில் பயணம் செய்து வந்தனர். நவம்பர்-ஜனவரி மாதங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

தனது அன்றாட தேவைகளை முடிப்பதற்கு உயிர் ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது கடல் போக்குவரத்திலேயே காலத்தை கடத்தினர். 1965 ம் ஆண்டுகளுக்கு முன்னர் கடல் போக்குவரத்திற்கு "வத்தை" பயன்படுத்தப்பட்டது. 1914.நவம்பர் மாதம் மூதூர் -திருகோணமலை பயணிகள் படகு(வத்தை) கடல் கொந்தளிப்பினால் கடலில் மூழ்கி 11 பயணிகள் மரணித்தனர்.

1924ல் மூதூர் துறைமுகத்தை அண்மித்த வேளையில் பொருட்கள் ஏற்றி வந்த "பாய்கப்பல்" கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். 1965இன் பின்னர் "லோன்ஞ்"மோட்டார் படகு பயன்படுத்தப்படது. இதில் 100 அல்லது 150 பேர் பயணம் செய்து வந்தனர்.

1993.01.25 ம் திகதி திருமலையிலிருந்து மூதூர் நோக்கி மாலை 02.30 மணிக்கு 107 பயணிகளுடன் புறப்பட்ட மோட்டார் படகு துறைமுகத்தை விட்டு வெளிக்கடல் பகுதியான " பாதாள மலை" பகுதியில் கடல் கொந்தளிப்பின் காரணமாக மூழ்கியது. இதில் மொத்தம் 59 பேர் மரணித்தனர். இதில் 13 பேரின் மரணித்த உடல் கண்டெடுக்கப்பட்டது. 46 பேர் நீரில் மூழ்கி மரணமடைந்து காணாமல் போனவரகள். 48 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டனர்.

இதில் மரணித்த அனைவரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போமாக.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -