பிரதி அமைச்சர் அமீர் அலியின் அதிரடி செயற்பாடடு..!

ஊடகப் பிரிவு-
ன்று [2016/01/05] அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் அம்பாறை மாவட்ட மீனவர் சங்கத்தினர் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களை பிரதி அமைச்சரின் காரியாலயத்தில் சந்தித்தனர்.

இதன் போது அண்மையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த சகோதர்கள் ஆறு பேர் ஆழ் கடலில் மீன் பிடிக்க சென்று படகுடன் காணமல் போன சம்பவம் சம்பந்தமாக பிரதியமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆள் கடலுக்கு செல்லும் மீனவர்கள் ஆறு நாட்களின் பின்னர் கரைக்கு திரும்புவது வழமையாகும்.ஆனால் கடந்த [2016.12.24]அன்று கடலுக்குச் சென்ற படகுகள் தொடர்பாக ஆறு நாட்களை கடந்தும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும்,உறவினர்கள் கவலை அடைந்துள்ளதாகவும் பிரதியமைச்சரிடம் முறையீடு செய்தனர்.

குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக பிரதி அமைச்சர் மேலும் செய்திகளை கேட்டறிந்தார். குறித்த இரு படகுகளிலும் சென்றவர்கள் விபரம் பின்வருமாறு காஜா முஹைதீன், வஹாப், அர்ஜில், நஸ்ருதீன், அலாவுதீன், வாஹித், ஆகியோரே மேற்பட்ட சம்பவத்தில் காணமல் போனவர்களகும்.

குறித்த இரு படகுகளும் மாலைதீவில் கரை ஒதுங்கி இருக்கும் எனும் சந்தேகம் தாம் கொண்டுள்ளதாக மீனவர் சங்கத்தினர் பிரதியமைச்சரிடம் கூறிய தகவலுக்கு அமைய பிரதியமைச்சர் அவர்கள் மாலைதீவு தூதகரத்துக்கு அழைப்பினை மேற்கொண்டு காணமல் போன படகுகள் சம்பந்தமான விடயத்தினை தெரியப்படுத்தி துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினை வேண்டிக்கொண்டார்.

இதனை அடுத்து துரிதமாக செயற்பட்ட மாலை தீவு தூதுவராலயம் குறித்த இரண்டு படகுகளும் காணமல் போன ஆறு மீனவர்களும் மாலை தீவில் பாதுகாப்பாக இருப்பதாக பிரதி அமைச்சரிடம் தெரிவித்தனர்.

மாலை தீவில் கண்டு பிடிக்கப்பட்ட இரண்டு படகுகளையும்,ஆறு மீனவர்களையும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -