இலங்கை தகவல்களை ட்ரம்ப்பிற்கு அறிக்கையாக சமர்பிக்க புதியவர் வருகை

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் பிரதி இராஜாங்க செயலாளர் அஞ்செலா அக்லெர் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை காலமும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளராக நிஷா பிஷ்வால் பதவி வகித்து வந்திருந்தார். இவரது இராஜினாமாவினை தொடர்ந்து, அஞ்செலா அக்லெர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கைக்கு வந்துள்ள அஞ்செலா அக்லெர் வெள்ளிக்கிழமை வரைக்கும் தங்கியிருந்து அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளுடன் தந்திப்பினை நடத்தவுள்ளார்.

அத்துடன் இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு அறிக்கை சமர்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதும் "தலையீடு செய்யாத வெளிவிவகாரக் கொள்கையை வரவேற்பதாக" முன்னாள் ஜனாதிபதி வாழ்த்துக்களை கூறியிருந்தார். ட்ரம்ப்பின் வெளிவிவகார கொள்கை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்ற வேளையில் இலங்கை தொடர்பான கண்ணோட்டம் எவ்வாறு இருக்கப்போகின்றது...?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -