பாண் உட்பட பேக்கரி உணவுகளின் விலை அதிகரிக்கும் அபாயம்..!

பாண் உட்பட பேக்கரிகளில் தயாரிக்கப்படும் உணவுகளின் விலை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இன்றைய தினம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

பேக்கரியில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் கலவைப்பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டமையினாலேயே இந்த திட்டம்முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

மாஜரின், பாம் எண்ணெய், கோதுமை மா மற்றும் சீனியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கலவைப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்படுமாயின் பேக்கரிதயாரிக்கப்படும் உணவுகளின் விலையும் அதிகரிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் மாஜரின் கொள்வனவு செய்ய 185 ரூபா செலவாகுவதாகவும், ஒரு லீட்டர்பாம் எண்ணெய் கொள்வனவு செய்ய 120 ரூபா செலவாகுவதாகவும் சங்கத்தின் தலைவர்குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -