யூசுப் கச்சி மரைக்கார் கலாநிதிப் பட்டம் பெற்றார்

தாராபுரம், மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட யூசுப் கச்சி மரைக்கார் அவர்களுக்கு கொழும்பு பல்கலைக் கழகத்தின் பட்டப்பின் படிப்புப் பிரிவினால் 19.12.2016 இலிருந்து மனித உரிமையில் கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இவரது 'உண்மையறிதல் மீளிணக்கத்திற்கான சவால்களும் வாய்ப்புகளும்:இடம்பெயர்ந்த வடபுல முஸ்லீம்களைப்பற்றிய ஒரு தனிநிலை ஆய்வு' என்ற ஆய்வுக் கட்டுரையை ஏற்றுக் கொண்டு இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் தனது ஆரம்பக் கல்வியை தாராபுரம் அல்மினா முஸ்லீம் மகாவித்தியாலயம், எருக்கலம்பிட்டி மத்திய வித்தியாலயம் ஆகியவற்றில் மேற்கொண்டார்.

பின்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தில் வர்த்தக இளமாணிப் பட்டத்தில் முதற் தரத்தில் சித்தியடைந்து மனித உரிமையில் விசேட சித்தியுடன் முதுமாணிப் பட்டத்தை கொழும்பு பல்கலைக் கழகத்தில்; நிறைவு செய்துள்ளார்.

இவை தவிரவும் இலங்கை வங்கியியாளர் நிறுவனத்தின் பட்டப் படிப்பையும் , ஜப்பானின் சர்வதேச பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

ஒரு வங்கியாளரான இவர், இலங்கை வங்கி, சவூதி ஹோலன்ட் மற்றும் சவூதி பிரான்ஸ் வங்கிகளில் 30 வருடங்கள் உயர் பதவி வகித்ததுடன் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிரதித் தலைவராகவும் ஆறு வருடங்கள் பணியாற்றியுள்ளார்.

இவை தவிரவும் ரொஷான் வர்த்தக நிலையம், ரொமான்ஸ் கழகம் மற்றும் உணவகம் என்பவற்றின் தலைவராகவும் கடமையாற்றி வருகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -