சுயநலவாதிகளா மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் ?

File Pic
Eng. Zafnas Zarook-

ன்று இலங்கையில் தனியார் கல்வி மற்றும் அரச கல்விக்கு இடைலான தார்மிக போராடடம் நடந்து கொண்டிருக்கும் தருவாயில் ஒரு சிலர் அறியாமையின் காரணமாகவோ அல்லது சுய நலத்தின் காரணமாகவோ சாதக ,பாதக கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.இத் தருவாயில் இலங்கை அரச மருத்துவப் பீடத்தினை பற்றி அறியாதவர்களுக்காய் ,சில புள்ளி விபரங்களுடன் இக் கட்டுரையை முன் வைக்கிறேன்

சுமார் 50 வருடத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை மருத்துவ பீடம் ஆனது, இன்று அங்கிகாரம் பெற்ற 17 பல்கலை கழகங்களில், 7 பல்கலை கழகங்களில் தனது மருத்துவ பீடத்தை ஆரம்பித்து ,வருடத்திற்கு 1138 மாணவர்களுக்கு MBBS (Bachelor of Medicine ,Bachelor of Surgery ) என்ற படடத்தினை வழங்கி வருகின்றது. இப் பட்டத்தினை பெற மாணவர்கள் பல தடை தாண்டல்களை தாண்டவேண்டும் ,அது குறித்து அடுத்து விரிவாய் பார்ப்போம்.

இலங்கை கல்வி இணை பொறுத்தவரை பாடசாலை கல்வித் திடடம் பொதுவாய் செயற்முறை கல்வி முறைமைக்கு அப்பாற்படடது அதாவது பெரும்பாலும் தொட்டு உணரவோ , பார்வையாலோ அமைந்திருக்காது. ஆனால் உயர் கல்வி ஆனது கூடுதலாக செயல் முறை ஆகவே அமைந்திருக்கும். இங்கு கற்பனை இற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது. அதிலும் மருத்துவ பீடத்தினை பொறுத்தவரை 99 .99 வீதம் செயல் முறைக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மருத்துவ பீட மாணவர்களின் கல்வி Non Clinical Part of the Curriculum, Clinical Part of the Curriculum என இரண்டு பிரிவாய் பிரிக்கப்பட்டிருக்கும். இதில் 5 வருட மருத்துவ கற்கை நெறியில் முதல் இரண்டு வருடமும் Non Clinical Part of the Curriculum இற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும் மூன்றாம் வருடத்தில் இருந்து Clinical Part of the Curriculum இற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

Clinical Part of the Curriculum இற்காக இலங்கை அரசு தனது 593 அரச வைத்தியசாலைகளில் சுமார் 16 வைத்திய சாலைகளை Teaching Hospital என தரம் பிரித்து மாணவர்களின் கற்கை நெறிக்கு பெரும் பங்காற்றி வருகிறது. இவ் Teaching Hospital ஆனது பிந்திய மூன்று வருடத்தில் முழுமையாக பயன்படுத்தப்படடாலும் ,ஆரம்ப இரு வருடத்தில் இதன் பங்களிப்பு அத்தியாவசியம் ஆனது.ஆக மொத்தத்தில் மருத்துவ பீட மாணவர்களுக்கு Teaching Hospitel ஆனது சுமார் 80 வீத பங்களிப்பை அளிக்கின்றது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.

இவ்வாறு Teaching Hospitel ஆக பிரகணப்படுத்தப்படும் வைத்தியசாலைகல் பொதுவாய் பிரசித்தி பெற்றதாகவும்,அதிக தரம் வாய்ந்ததாகவும் ,அதிக நோயாளிகளை அனுமதிக்க கூடியதாகவும் 

காணப்படும். உதாரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, கலுபோவில வைத்தியசாலை, அங்கோட வைத்தியசாலை என்பன முறையே 3246 , 1093 , 1561 படுக்கைகளை கொண்டுள்ளது. இதன் மூலம் அதிக வெளிநோயாளர்களை உள்வாங்க முடியும்,இதனால் மருத்துவ பீட மாணவர்கள் அதிக நன்மைகளை பெற முடியும். அத்தோடு குறைத்த கட்டில்களை கொண்ட பொது Teaching Hospital ஆக 900 கட்டில்களோடு மடடகளப்பு வைத்தியசாலை இடம் பெறுவதையும் இங்கு குறிப்பிட வேண்டிய விடயம் ஆகும்.


இப்படிபடட பிரசித்தி பெற்ற Teaching Hospital இல் மாணவர்களுக்கு என்ன இலாபம் என்ற வினா பலரினுள் எழலாம்.இப்படிப்படட வைத்தியசாலைகளில் பலவிதமான நோய்களை உடையோர் தினம் தினம் நூற்றுக் கணக்கானோர் வருகை தருவார்,இதனால் மாணவர்களுக்கு பல விதமான மேலதிக நன்மைகள் மற்றும் செயற்முறைகள் கிடைக்கும், அத்தோடு மருத்துவ பீட மாணவர்கள் Post Mortem செயன் முறையை வெறுமையாய் வீடியோ மூலம் கற்பது இல்லை மாறாக இருவர் அல்லது மூவர் சேர்ந்து தனது ஆசானின் வழிகாடடலின் கீழ் குறைந்தது இரண்டு Body களை இதயம், மூளை என ஒவ்வொரு பாகமாக வெட்டி செயற்முறைக்கு உட்படுத்துவர். இதன் மூலம் பல செயற்முறையில் தேர்ச்சி பெற்ற சிறந்த தரமான வைத்தியர்களை நம் நாடு பெற முடியும்.


இலங்கை அரச மருத்துவ பிட மாணவர்களில் கல்வி செயற்பாடு மற்றும் Teaching Hospital இந்த முக்கியத்துவம் பற்றி சிறிது அலசிய நாம் அடுத்து SAITM பற்றி உற்று நோக்குவோம். 


SAITM (South Asian Institute of Technology and Medicine (Management)) கடந்த 2011 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தனியார் கல்லூரி.இவர்கள் மீது கலை,வர்த்தகம், என எந்த பிரிவில் கற்றவர்களாலும் மருத்துவம் கற்க முடியும், உயர் தரத்தில் 3 பாடங்கள் சித்தி பெறாவிட்டாலும் மருத்துவம் கற்க முடியும், பணம் மட்டுமே முதலீடு என்ற பலவகையான குற்றங்கள், வைத்தியர்கள் பொறாமை காரணமாக முன் வைக்கிறார்கள் என ஒரு எடு கோளினை நாம் எடுத்துக் கொள்வோம்.

மேற்குறித்த எடு கோளின் படி SAITM இல் கற்பவர்கள் அனைவரும் உயர் தரத்தில் உயிரியல் பிரிவில் கற்றவர்கள் ,மருத்துவ பீடத்துக்கு மிகச் சிறிய Z - Score இல் தவறியவர்கள். அனைவரும் பல மடங்கு மருத்துவ பீடத்துக்கு தகுதியானவர்கள் என்ற முடிவுக்கு வரமுடியும்.எனவே SAITM முறையானது. 

முறையான SAITM இல் மாணவர்கள் பலர் மருத்துவத்தினை தொடர்கினறனர்.அவ்வாறாயின் நான் மேலே விபரித்த முறையில் தரமான தேர்ச்சியான மருத்துவர்களை பெற Teaching Hospital இம் மாணவர்களுக்கு அத்தியாவசியம் ஆனது . அப்படியாயின் இவர்களிடம் Teaching Hospital இருக்கின்றதா என யாரும் வினவினாள் பதில் ஆம்.

SAITM இன் teaching Hospital ஆக Dr Neville Fernando Teaching Hospital (NFTH) ஆனது 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ் வைத்திய சாலை ஆனது 1002 கட்டில்களை கொண்டுள்ளதோடு முழுமையான தனியார் வைத்தியசாலை ஆனால் மருத்துவ பீடம் ஆரம்பிக்க படடது 2011 ம் ஆண்டு என்பது இங்கு நினைவு படுத்த வேண்டிய விடயம் ஆகும்.

தனியார் வைத்தியசாலை ஒன்று teaching hospitel ஆக இருந்து மாணவர்களுக்கு பிரயோசனத்தினைனை வழங்க முடியுமா? என நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

மேற்குறித்த வைத்தியசாலை திறந்ததில் இருந்து 'மத்தள விமான நிலையம்' போன்று சன நடமாடடம் இன்றி காணப்படுகின்றது. ஏன் எனில் அபிவிருத்தி அடைந்து வரும் இலங்கை போன்ற நாடுகளில் தனியார் வைத்தியசாலை இற்கு பெரும்பாலானோர் காய்ச்சல் போன்ற சிறிய நோய்களுக்கு செல்வார்கள் தவிர பெரும் வருத்தங்களோடு செல்வது அரிது. இதனை Dr Neville Fernando Teaching Hospital (NFTH) இணையத் தளத்தில் விசேட வைத்தியர்களை 250 ரூபா முதல் பெறலாம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் இலகுவாய் உணர முடியும். 

மருத்துவ பீடத்தில் சுமார் வீதம் தாக்கம் செலுத்தும் முறையான வைத்தியசாலை பயிற்சியை பெறாமல் இது போன்ற வைத்தியசாலையில் தனியார் மருத்துவ பீட மாண்வர்கள் காய்ச்சலுக்கு மருந்து வழங்க மாத்திரமே பயிற்சியை பெற்று எவ்வாறு முழுமையான வைத்தியர் ஆக முடியும்? என்பதினை சாதாரண மக்களினாலே தெளிவாய் விளங்கி கொள்ளமுடியும். 

இப்படியான பல குறைகளை கொண்ட தனியார் வைத்திய பீடத்தினை ஆராய 1925 ஆண்டு முதல் இயங்கும் SLMC (Sri Lanka Medical Council) ஆனது தரம் வாய்ந்த குழிவினை SAITM இற்கு அனுப்பி இருந்தது. இக் குழு ஆனது மேற்குறித்த அனைத்து விடயங்களையும் ஆராய்ந்து 'SAITM ஆனது மருத்துவக் கல்லூரி இற்கு பொருத்தம் அற்றது' என தனது 21 பக்க அறிக்கையை வெளி விட்ட்து. 

இக் குழுவின் அறிக்கை தவறானது என்றும் SLMC இணை தடை செய்ய வேண்டும் என்றும் SAITM இணை சார்ந்தவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவு எதிர்வரும் 31 ம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

பண பலமும் ,அதிகாரமும் கொண்ட அணி ஆனது, ஆசியாவில் குழந்தை இறப்பு வீதம் 1000 இற்கு 9 .5 என்ற வீதத்தினை பேண உதவிய சுமார் 17 , 129 தகுதியான வைத்தியர்களை இனம் காட்டிய SLMC இணை சுய நலத்துக்காய் அழிக்க ஒன்று கூடியுள்ளது.

எனவே இவவறான தகுதி அற்ற வைத்தியர்கள் மற்றும் அநியாயங்கள் இருந்து நம் நாட்டினை பாதுகாக்க நாம் ஒன்றிணைய வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -