"தாருஸ்ஸலாம் விளையாட்டு பொருளல்ல"

சபா ரௌஸ் கரீம், கல்முனை-

23.01.2017 திகதியன்று அதாவது நேற்று ஒரு கட்டுரையை வாசித்தேன் புத்தளத்தில் மினி தாருஸ்ஸலாம் ஏன் அது போன்று கிழக்கில் அமையக்கூடாது சிறந்த கேள்வியை ஒரு எழுத்தாளர் எழுப்பியுள்ளார்

அந்த எழுத்தாளர் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த இஸ்தாபகத் தலைவர் மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் கூட ஒரு தாருஸ்ஸலாத்தில் தான் மக்கள் குறைகளை நிவர்த்தி செய்தார் அவருக்கு பல தாருஸ்ஸலாம் கிளைகளை அமைக்கும் யோசனை வரவில்லையா ? அவர் ஒரு தாருஸ்ஸலாத்தில் மக்கள் குறைககளை நிவர்த்தி செய்யவில்லையா ? மறைந்த தலைவர் தாருஸ்ஸலாத்தில் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ததை விட நேரில் சென்று நிவர்த்தி செய்ததுதான் அதிகம்

இனி வருங்காலங்களில் மாகாணத்துக்கு ஒரு மினி தாருஸ்ஸலாம் ,மாவட்டத்துக்கு ஒரு மினி தாருஸ்ஸலாம் ,ஊருக்கு ஊருக்கு ஒரு தாருஸ்ஸலாம் கேட்க்கும் நிலை நிச்சயம் உருவாகும்  என்பதை எழுத்தாளரே மனதில் வைத்துக்கொள்ளுங்கள்நா ட்டில் இரு பிரதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சிக்கு கூட தலைமைக் காரியாலயமாக ஸ்ரீ கொத்தா மாத்திரம் தான் இருக்கின்றன

பல ஸ்ரீ கொத்தா காரியாலயம் அமைக்க அந்த கட்சியிடம் பணமில்லையா ?

அந்த கட்சி மக்கள் மனதில் இடம்பிடிக்கவில்லையா ?ஐக்கிய தேசிய கட்சி அபிவிருத்தியால் நகர ,கிராம மக்கள் பயனடையவில்லையா?என்ற கேள்விகளை உமக்குள் எழுப்பி பாருங்கள் பின்னர் உமது மனசாட்சியே உமக்கே பதிலளிக்கும்

கற்களுக்கும் ,மண்ணுக்கும் பல இலட்சங்களை செலவு செய்து தாருஸ்ஸலாம் கிளைகள் அமைப்பதால் மக்களுக்கு கிடைக்கவுள்ள நன்மைகள் எதுவுமே இல்லை ஒரு காவலாளி இருப்பார் பல மின் குமிழ்கள் ஒளிரும் அதை விட அந்த கட்டடத்தை அமைக்கும் பணத்தை பல நல்லவழிகளில் செலவு செய்யலாம் என்பதை கட்சி செய்யலாம் உதாரணமாக ஒரு சிலவற்றை கூறுகின்றேன் 

விதவைகளுக்கு ஒரு சிறு தொழிலுக்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தல்,முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களை பராமரித்தல் , நிரந்தர வீடுகளின்றி திருமணமாகாமல் கண்ணீர் வடிக்கும் சகோதரிகளுக்கு காணி வழங்கி வீடுகளை அமைத்து கொடுத்தல் போன்ற பல நல்ல திட்டங்கள் உள்ளன இது போன்ற நல்ல விடயங்களை நிறைவேற்ற தலைமை முன்வரவேண்டும் என எழுதுங்கள் நீங்கள் சொல்வது போல தாருஸ்ஸலாம் அமைத்து அழகு பார்க்க மக்கள் ஒரு போதும் விரும்பமாட்டார்கள்

மறைந்த இஸ்தாபகத் தலைவர் மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் காலத்தில் குறைவான உயர்பீட உறுப்பினர்கள்தான் இருந்தார்கள் ஆனால் தலைவரின் பலமிக்க அமைச்சினாலும் திறமையினாலும் விடா முயற்சியினாலும் அல்லாஹ்வின் உதவியால் அனைத்து ஊர்களுக்கும் அபிவிருத்திகள் சென்றடைந்தன மறக்க முடியாது இன்று முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் மூலம் உயர்பீட உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கபட்டுள்ளது இது மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்பதை சிலர் உணர்ந்து கொள்ளவேண்டும்

மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய பல இலட்சம் செலவு செய்து பல தாருஸ்ஸலாம் அமைப்பதை விட அனைத்து சிறு கிராமங்களுக்கும் பல உயர்பீட உறுப்பினர்களை உருவாக்கினால் அதை விட சிறப்பாக அமையும் காரணம் அபிவிருத்தி விடயங்கள் வரும் போது தனது கிராமத்துக்கும் தரவேண்டும் என உச்ச பீட கூட்டத்தில் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து தன் கிராமத்துக்கான ,நகரத்துக்கான அபிவிருத்திகளை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்எ திர்வரும் காலங்களில் தாருஸ்ஸலாம் கிளைகளை அதிகரிக்காமல் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களின் எண்ணிக்கையை அனைத்து கிராமங்களிலும் அதிகரிக்க முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்வரவேண்டும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -