சுகாதார அமைச்சர்களின் மாநாட்டில் அமைச்சர் நசீர் விசேட திட்டம் சமர்பிப்பு..!

அபு அலா,சப்னி அஹமட்- 
சுகாதார, போசனை, சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு ஏற்பாடு செய்த மாகாண அமைச்சர்களுக்கான மாநாடு இன்று (27) கொழும்பு இரத்த வங்கி கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்தின தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது, பிரதி சுகாதார அமைச்சர் பைஷல் காசீம், சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார திணைக்கள பணிப்பாளர்கள், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர், மேல், வட மத்தி, மத்திய, மாகாண அமைச்சர்களும், மாகாண செயலாளர்கள், மாகாணப்பணிப்பாளர், சுதேச வைத்திய பணிப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் கிழக்கு மாகாண மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களும், இவ்வருடம் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்களையும், மாகாணத்தில் உள்ள சுகாதார பிரச்சினைகளையும் அங்கு முன்வைத்து உரையாற்றி கிழக்கு மாகாண சுகாதார அபிவிருத்தி தொடர்பாக பற்றி விசேட திட்டம் ஒன்றையும் சமர்ப்பித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -