இந்த அரசும் பழைய குருடி கதவை திறடி கதைதான் - பொறுத்தது போதும்

ட்ட வரைபுகளும், எல்லை மீள் நிர்ணயமும் மிருகங்கள் வாழ்வதற்காக என்று எண்ணிக் கொண்டு மனித சமூகத்தின் வாழ்வுரிமையினை பறிக்கும் சூட்சுமமான சாதணையினை தற்போதைய நல்லாட்சியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியினைக்  கொண்ட அரசு முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் என்னை காப்பாற்றுங்கள் உங்களை நான் காப்பாற்றுவேன் என்று அவரது பணியில்சொன்ன போதும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த இனவாத அமைப்பின் வீராப்புக்களுக்கு காது கொடுத்தமை ஆட்சி மாற்றத்திற்கு அடிகோலானது.

இதனை மறந்து பழைய குருடி கதவை திறடி என்கின்ற வழமையான பாதையினை இந்த அரசும் தமது அணிகளன்களாக தேர்ந்தெடுத்துள்ள சாதணம் தான் தற்போதைய வில்பத்து விவகாரம். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் எமது நாட்டின் ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விமானத்தில் சென்ற போது வில்பத்து வனத்தை பார்க்க கிடைத்தாகவும், அது அழிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்திருந்தார். இந்த கருத்தை எடுத்துக் கொண்டு முஸ்லிம் எதிர் போக்கு சிந்தணையாளர்களும், மத குருமார்களும் அதற்கெதிரான பிரசாரங்களை மிகவும் வேகமாக பரப்பினர். குறிப்பாக அமைச்சர் றிசாத் பதியுதீனை இலக்கு வைத்து பல்வேறு சோடிக்கப்பட்ட உண்மையற்ற கருத்துக்களை அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் விதைத்தனர். 

அத்தோடு மட்டுமல்லாது வில்பத்தினை முஸ்லிம்கள் அழிக்கின்றனர் என கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இவ்வாறானெதொரு நிலையில் இது அப்பட்டமான பொய் என்பதை அமைச்சர் றிசாத் பதியுதீன் ஊடகங்கள் மூலம் நிரூபி்த்த போதும், அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே போனது. அரசாங்கத்தின் உயர் மட்டத்தின் அனசரனையுடன் சில இனவாத சிங்கள ஊடகங்கள் தொடர்ந்தேச்சையாக படு மோசமான முறையில் ஊடக பலத்தை வைத்து முன்னெடுத்துவந்த பிரசாரங்கள் ஏராளம்.

இது இவ்வாறு இருக்கையில் மறுபுரத்தில் முஸ்லிம் இயக்கங்களை தாக்கும் செயற்பாடுகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அண்மையில் நண்பர் றாசிக் அவர்களின் விடயம் சிலாகித்து பேசப்பட வேண்டியதொன்று சிறுபான்மை என்று எமது முஸ்லிம் சமூகத்தை நோக்கி எவரும் கூறவோ அல்லது நாம் நம்மை சிறுபான்மை சமூகம் என்று அழைப்பது என்பது கோழைத்தனத்தின் வெளிப்பாடாகும். இலங்கை தான் எனது தாய் நாடு என்றால் எதற்காக நாம் சிறுபான்மை என்று அஞ்சி ஓட வேண்டும். இந்த சிறுபான்மை தான் பெறும்பான்மை சமூகத்தின் அரசியல் தலை விதியினை தீர்மாணிக்கும் ஒரு பலம் என்பதை கடந்த இரு தேர்தல்களிலும் நிருபித்து காட்டிவிட்டு இன்று குட்ட குட்ட குணிந்து கொண்டு போகின்ற நிலையில் இருந்து விடுபட வேண்டிய காலத்தின் தேவையாகவுள்ளது என்பது சிந்தணைக்குட்படுத்தப்பட வேண்டியதொன்று. அரசியல் தலைமைகள் மட்டுமல்ல ஆட்சி மாற்றத்தை செய்தோம் என்று கூறும் சிவில் அமைப்புக்களும. ஏன் பொது மக்களும் பதிலிருக்க வேண்டிய கேள்வியாகும்.

ஒரு சமூகம் 1990 ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டு மீண்டும் 30 வருடங்களின் பின்னர் தமது தாயக மண்ணுக்கு போகின்ற போது அவர்களது தேவைகள் தொடர்பில் அரசு எடுக்க வேண்டிய பணிகளை ஒரு தனிமனிதன் அரசில் தலைவனாக நின்று போராடி வெற்றை பெற்றுக்கொடுக்க முனைகின்றார் என்பதை தாங்கிக் கொள்ள முடியாத சதிகாரர்கள் இன்று இந்த வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் அனனைத்து கைங்கரியத்தினையும் செய்துவருகின்றனர். இந்த நிலையில் அரசியல் அபிலாஷைகளுக்கு அப்பால் முஸ்லிம் சமூகத்தின் தேவைப்பாடுகளை குளிதோண்டிக புதைக்கும் இந்த நல்லாட்சியின் மறுமுகத்தின் வெளிப்பாட்டினை பார்த்துக் கொண்டு மெளினகளாக நாம் இருப்போம் என்றால், நாம் பலஸ்தீனத்துக்கும், சிரியாவுக்கும், ஏனைய நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் வன்முறைகளை கண்டித்து என்ன பலன் இருக்கின்றது.

அண்டை வீட்டான் பசித்திருக்க நீ மட்டும் வயிறு புடைக்க உன்பவன் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது என்ற கருத்தினை நபிகள் நாயகம் (ஸல்) அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாக கூறியிருக்கையில் நாம் அதிலிருந்து தடம் புரண்டு எமக்கென்ன ஆச்சு என்ற பாராமுகமாக இருப்போமென்றால் நாளை படைத்த எமது இறைவனிடத்தில் என்ன பதிலை எம்மால் முடியும்,

ஒரு மனிதனுக்கு மானம்,மறியாதை எவ்வளவு முக்கியமோ அதை விட அவன் பிறந்த வாழ்ந்த மண் முக்கியமானது. இந்த மண்ணுக்கான தான் உலக மற்றும் எமது நாட்டில் நடத்தப்பட்ட போராட்டங்கள் விடுதலை என்ற பெயர் தாங்கிவந்துள்ளது.அந்த போராட்டம் எமது சமூகத்திற்கும் விதிவிலக்கல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.இன்று இந்த ஓரு இலட்சம் வட புல அகதிகளுக்கு இந்த அநீதி நாளை ஏன் அது எமது பக்கம் திரும்பாது என்ற கேள்விக்கான விடையினை நாம் கையில் வைத்துக்கொள்வது பொருத்தமாகும்,

அளுத்தகமயில் கடந்த ஆட்சி காலத்தில் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல்கள், இதனோடு கூடிய இழப்புக்கள் இன்னும் மாறாத நிலையில் மீண்டும் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு நல்லாட்சி தமது முகத்தை பதைக்க புறப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் தலைமையில் இருந்து வெளிவருகின்றதா என்று மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது என்பதை எடுத்துரைக்க வேண்டும்.

காலத்திற்கு காலம் புது முகம் காட்டி புதிய பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்ட போதும், வட புல முஸ்லிம்களின மீள்குடியேற்றம் என்பது முழுமை பெறாத ஒன்றாகவே இருக்கின்றது. கடந்த அரசாங்த்தில் இந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பல எதிர்ப்புக்கள் வந்த போதும் அப்போதைய பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இம்மக்களது அடிப்பைடை தேவையாக இருந்த இம்மக்களது காணிகளை உரிய சட்டதிட்டங்களுக்கு அமைய பெற்றுக்கொடுக்கும் பணியினை செய்தார். அவ்வாறு அன்று இது இடம் பெறாமல் போயிருக்குமெனில் இன்று எமது வடபுல மக்கள் ஒழுகும் கிடுகிற்குள் முக்காடு போட்டு வாழ வேண்டிய நிலையினையே அனுபவிக்க நேரிட்டிருக்கும். இஞ்சி இடத்திற்கம் வஞ்சம் தீர்க்கும் இனவாதிகளின் கோரத்திற்குள் வடபுல முஸ்லிம்கள் அடைக்கப்பட்டு முடக்கப்பட்டு போயிருப்பார்கள் என்பது மறுதலிக்கப்படாத உண்மையாகும்.

இன்று வீராப்பு பேசும் சில அரசியல்வாதிகள் தனது எதிரி தோற்றால் போதும், அதற்காக இம்மக்களை பலிக்கடாக்களாக மாற்றவும் பயப்படப்போவதில்லை என்று கூவி திரிகின்ற அசிங்கத்தனமான அசட்டுத்தனமாக அநாகரிமாக அரசியல் செயற்பாடுகளை செய்வருகின்றமை கவலைக்குரியவிடயமாகும், இவ்வாறானதொரு நிலையில 2012 ஆம் ஆண்டு வடபுல முஸ்லிம்கள் வாழ்ந்த பூமியினை கொழும்பில் இருந்தவாறு ஜீபிஎஸ் தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி மறிசுக்கட்டி முதல் சிலவாத்துறை வரைக்குமான பகுதியினை வனத்துக்கு சொந்தமானதாக பிரகடனப்படுத்திதன் விளைவு 1902 ஆம் முதல் இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வுரிமையினை அப்போதைய அரசு சூன்யமாக மாற்றியது பின்னர் தெரியவந்தது.

அதே வேளை நேற்று கண்டியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வில்பத்து வனப்பகுதி அழிக்கப்படவில்லையென்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், வனபகுதியினை அகலப்படுத்தும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த அந்த பகுதிகளை வன ஜீவராசிகள் திணைக்களத்திற்குரிய பிரதேசமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பபோவதாக அறிவித்துள்ளதன் ஆபத்து தொடர்பில் நாம் கூர்ந்து அவதானிக்க வேண்டியுள்ளது. ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தினையும் மீண்டும் ஒரு அகதி வாழ்க்கையினை றே்கொள்ள தயாராகுமாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. வந்தவன் நலதை செய்யவான் என்ற இருந்தவனை இழந்த கதையாக வட புல முஸ்லிம்களின் நிலை மாறியுள்ளது. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக இது வடிவம் கொண்டுள்ளது. இதற்கு எதிராக வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. அரசியலில் எப்போதும் நிரந்தர நன்பனுமில்லை, நிரந்தர எதிரியுமில்லை என்பதற்கொப்ப சில காத்திரமான நடவடிக்கைகைள தலைமைகள் மட்டுமல்ல பொதுமக்களும் எடுக்க வேண்டிய தருணம் தற்போது தான் ஏற்பட்டுள்ளது.

ஆயுத கலாசாரத்தினால் தீர்வை அடைய முடியாது அது இழப்புக்களையும், வேதனைகளையும் மட்டுமே பெற்றுத்தரும் என்பதை கடந்த கால பல போராட்டங்கள் எமக்கு கற்றுக்கொடுத்த பாடமாகும். அதனை கவனத்திற் கொண்டு சாத்வீக போராட்டங்களுடன், சர்வதேசத்தின் பார்வையினை கொண்டுவரும் நகர்த்தல்கள் இன்றியமையாயது என்பதைனை நாம் புரிந்து கொண்டு அதனை முன்னெடுக்க தேவையான அரசியல் ஒற்றுமையுடன் கூடிய பலம், சிந்தணையாளர்களின் பங்குபற்றுதல், துணிந்து செல்லும் துாய்மையான உள்ளங்களின் ஒருங்கிணைப்பு என்பனவற்றை நாம் தயார்படுத்த வேண்டியுள்ளது.

பொருத்தது போதும், எல்லை கடந்தததன் பின்பு இனி எமக்கு என்ன மிச்சம் மீதி என்ற வாசகத்தின் அடி நாதமாய் எமது முஸ்லிம் சமூகத்தின் அங்கங்கங்களே? நீங்கள் விழித்தெழுங்கள், உங்கள் ஆற்றல்களை கொட்டுங்கள்,அது கெட்டுப்போகி யாருக்கும் பிரயோசனமற்று போகும் வரை காத்து நிற்காதீர்கள். சிந்தணையின் வெளிப்பாடே உரிமையின் போராட்டாகும், காத்திருப்பேன் கண் விழிக்கும் வரை என் கருத்து தைக்கும் (குத்தும்) வரை உண் உணர்வுகளின் ரணங்களை......
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -