வில்பத்து விடயம் தொடர்பில் எவரும் விமர்சனம் செய்யக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
வில்பத்து காட்டை முஸ்லிம்கள் அழிக்கவில்லை. அதனை அண்மித்த பிரதேசங்களில் அவர்களது பூர்வீக நிலங்களிலேயே குடியேறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“எமது ஆட்சிக்காலத்தில் நாம் காட்டோடு காடாகிப் போன அவர்களது பூர்வீக நிலங்களை இனங்கண்டு விடுவித்துக் கொடுத்தோம். எமது ஆட்சிக் காலத்திலே மீள்குடியேற்றங்களும் இடம்பெற்றன. இவை அனைத்தும் சட்டரீதியாகவே நடைபெற்றது. குறுகிய அரசியல் இலாபங்களுக்காக வில்பத்து விடயத்தை விமர்சிக்க வேண்டாம்” என மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.