ஜனாதிபதி இனவாதிகளிடம் சரணடைந்து செல்கின்றார் - பிரதமர் நாடகமாடுகின்றார்

லங்கையில் இன்று முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களாக இருப்பவர்கள் ரணில், மைதிரி, மஹிந்த போன்றவர்கள் ஆவர். 

இவர்களில் ஜனாதிபதி மைதிரியை எடுத்துக் கொண்டால்:-

இவருக்கு அடுத்தமுறை ஜனாதிபதி ஆகும் என்னம் இல்லை, அதனை அவர் அறிவித்தும் விட்டார், அதே நேரம் அரசியல் வாரிசும் கிடையாது. அதனால் அவருக்கு இனிமேல் சிறுபாண்மைக் கட்சிகளை அனுசரித்து போகவேண்டும் என்ற என்னமும் இல்லை. அதனால் கடைசி காலத்தில் பௌத்தர்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்து வைத்துவிட்டு செல்லலாம் என்ற நினைப்பில் இனவாதிகளிடம் சரணடைந்து செல்கின்றார் என்பதே உண்மையாகும்.

பிரதமர் ரணிலை பொருத்தவரையில்:-

அவருக்கு அரசியல் வாரிசு என்று சொல்வதற்கு யாரும் இல்லை, ஐ.தே.கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்ற காலத்தில் இருந்து இதுவரை அவரால் ஒரு தேர்தல் வெற்றியைக் கூட பெறமுடியவில்லை, அதனால் அந்த கட்சிக்குள் அவர் வேண்டாத விருந்தாளியாகவே இருந்து வருகின்றார். அதே நேரம் தன்னுடைய தலைமையில் நாட்டின் உயர் பதவியான ஜனாதிபதி பதவியைப் பிடித்து, தனது அந்தஸ்த்தை நிரூபித்து விட்டுச் சென்று விடலாம் என்ற ஆசையில் காய்களை நகர்த்திக் கொண்டு வருகின்றார்.

இவருக்கு இப்போது முஸ்லிம், தமிழ், சிங்கள மக்களின் ஆதரவு தேவைபடுவதனால், இந்த இனவாதிகளின் விடயத்திலே மதில் மேல் பூனையாக குந்திக் கொண்டும், நடித்துக் கொண்டும் வருகின்றார்.

அதே நேரம் மஹிந்தவுக்கு ஆதரவான சிங்கள வாக்குகளை தனக்கு சார்பாக பெறவேண்டியிருப்பதால், நானும் ஒரு பௌத்தத்தின் பாதுகாவலன்தான் என்று காட்டிக் கொள்வதற்காக இனவாதிகளை கண்டிப்பதில் நாடகமாடுகின்றார் என்பதே உண்மையாகும்.

மஹிந்தையை பொருத்தவரையில்:-

அரசியலில் வாரிசுகளை கொண்டுள்ளார், தான் அரசியலுக்கு ஓய்வு கொடுத்தாலும் தனது வாரிசை அந்த இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று காய்நகர்த்திக் கொண்டு வருபவர்.

சிங்கள மக்களின் வாக்குகளை தனது தனிப்பட்ட செல்வாக்கின் மூலம் தக்கவைத்துள்ளார், ஆனால் சிறுபாண்மை மக்களின் ஆதரவு அவருக்கு கிடைப்பது முயல் கொம்பாகத்தான் இருக்கின்றது, அதனால் எதிர்வரும் காலங்களில் சிறுபாண்மை மக்களின் ஆதரவை பெறுவதற்கு அவருக்கு மிகத்தேவைபாடு உள்ளது என்பதும் உண்மைாகும்.

கடந்த காலங்களில் இந்த இனவாதிகளை அடக்கத் தவறியதன் காரணமாகத்தான் நாம் தோல்வியடைந்தோம் என்ற உண்மையை ஒத்துக்கொண்டு, அவர் இந்த இனவாதிகளை கண்டித்து வருவதையும் அண்மைகாலங்களில் காண்கின்றோம்.

வெளிநாட்டு ஊடவியளாலர்கள் முன்பே கூறியிருந்தார், இந்த பொதுபல சேனாதான் எனக்கு எதிராக செயல்பட்டு என்னை தோற்கடிக்கக் காரணமாய் இருந்தவர்கள் என்று பகிரங்கமாகவே கூறியிருந்தார்.

சம்பிக்க ரணவக்கதான் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை தடுத்தார் என்றும், அவர் வெளிநாட்டு ஏஜண்டாக என்னை வீழ்த்துவதற்கு பயன்படுத்தப்பட்டவர் என்பதும் பிறகுதான் நான் அறிந்து கொண்டேன் என்றும் குற்றம் சாட்டிருந்தார். இப்போது பல இடங்களில் தன் தவறை பகிரங்கமாக ஒத்துக்கொண்டு, முஸ்லிம் மக்களிடம் நெருங்கிச் செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது.

இது எந்தளவு அவருக்கு கைகொடுக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆகவே நாம் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், தான் நாளைக்கும் அரசியலில் இருக்கவேண்டும் என்ற என்னம் உள்ளவர்கள்தான் மற்ற சமூகங்களையும் அனைத்துச்செல்ல முயற்சிப்பார்கள் என்பதே இதிலிருந்து தெளிவாகின்ற உண்மையாகும்.
எம்.எச்.எம்.இப்ராஹிம்,
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -