கோறளை மத்தி பிரதேச செயல பிரிவில் சுய தொழில் ஊக்குவிப்பாளர் சங்கம் உருவாக்கம்.

எச்.எம்.எம்.பர்ஸான்-


கோறளைப் பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட செம்மண்ணோடைக் கிராமத்தில் சுய தொழில் ஊக்குவிப்பாளர்களுக்கான சந்திப்பு இன்று 27ம் திகதி செம்மண்ணோடை கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச்.அரபாத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஐ.எம்.ரியாஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு ஏனைய அதிதிகளாக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ. மன்சூர், சிறு கைத்தொழில் மேன்பாட்டு உத்தியோகத்தர் ஏ. ஜுனைதீன் மற்றும் திருமதி ஹப்ஸா, கல்பனா ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் சுய தொழில் ஊக்குவிப்பாளர் சங்கம் ஒன்றும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதோடு எதிர் காலத்தில் இச் சங்கத்தின் ஊடாக வட்டியில்லா கடன் உதவி வழங்கப்படுமென்றும் சுய தொழிலை மேன்படுத்துவதற்கு வழங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டன.

இச் சங்கத்தின் ஊடக நிதி வழங்குதல், சுய தொழிலை இனங்காட்டிக் கொடுத்தல் போன்றவை மேற்கொள்ளப் படும் என்றும் இச் சங்கத்தின் ஊடாகத்தான் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப் படும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.⁠⁠⁠⁠

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -