ஜனாதிபதி யாழிற்கு வருவது இதுவே கடைசி – சிவாஜி எச்சரிக்கை

பாறுக் ஷிஹான்-
திர்வரும் 04ஆம் திகதி யாழ்ப்பாணம் வருவதுதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிர்ப்புக்கள் இல்லாத கடைசி யாழ் விஜயமாக இருக்கும் என எச்சரித்துள்ள ரேலோ இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம் ஜனவரி 04 ஆம் திகதிக்குப் பின்னர் அவர் யாழ்ப்பாணம் வர விளைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பமும் கடும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரும் என தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமைத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மகிந்வோடு கூடவே இருந்து அவருடன் அப்பம் சாப்பிட்டுவிட்டு மறுகணமே மகிந்தவை ஏமாற்றிவிட்டு வந்ததுபோல நல்லாட்சி எனும் பெயரில் எம்மோடு உறவாடி எம்மையும் ஏமாற்றிவிட்டுச் செல்லக்கூடும் என எமக்கு அவர்மீது ஐயம் எழுகின்றது.

மனாநாயக்க தேரர்களின் ஆசீர்வாத்தோடுதான் அரசியல் தீர்வு என்றால் அவர்களோடே வைத்துக்கொள்ளட்டும் நாம் தேவையில்லை. அப்படியோ ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் மக்களின் தேவையின்றி ஆதரவின்றி வென்றிருக்கலாமே என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -