புல்மோட்டை பிரதேச மக்களுக்கான காணி அனுமதி பத்திரம் வழங்கி வைப்பு..!

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அவர்களின் முயற்சியின் பயனாக குச்சவெளி பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நசீர் அஹம்மத்,கிழக்கு மாகாண காணி அமைச்சர் ஆரியவதி கலபதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் ,மாகாண காணி ஆணையாளர்,உதவி காணி ஆணையாளர்,முன்னால் குச்சவெளி சபை தலைவர் முபாரக் ஆகியோரின் பங்கு பற்றுதலோடு புல்மோட்டை அரபாத் முஸ்லீம் வித்தியாலய கேட்போர் கூடத்தில் 25 (புதன்) வைபவரீதியாக பகிர்ந்தளிக்கப்பட்டது.

புல்மோட்டை பிரதேசத்தில் பல காலமாக பிரதேச மக்களின் குடியிருப்புக்காணி மற்றும் விவசாய காணிகளுக்கான சுமார் 730 அனுமதி பத்திரங்கள் முதல் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் உரையாற்றுகையில்;

புல்மோட்டை பிரதேசத்திற்கு இவ்வாறான நிகழ்வு வரலாற்றில் எழுதப்பட வேண்டும். ஏனெனில் கடந்த பல வருடங்களாக ஒரு சொற்ப அனுமதி பாத்திரங்களே வழங்கப்பட்டுவந்தன அதுவும் குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு சுமார் 22 கி.மீ தூரம் சென்று பெறவேண்டி இருத்தது ஆனால் இன்று முதல் தடைவையாக கிழக்கு மாகாண முதல்வர் உதவியோடு எனது பாரிய முயற்சியின் பயனாக புல்மோட்டை பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும் பிரதேச காணிகள் தொடர்பாக எனது மாகாண சபை காலமுதல் போராடி வருகின்றேன் என்பதை யாவரும் அறிவர் புல்மோட்டை பிரதேசத்தில் கடந்த மஹிந்த ஆட்சிக்காலத்தில் புனித பூமிக்காக சுமார் 3000 ஏக்கர் காணிகள் அளவிடப்பட முற்பட்டபோது நான் உட்பட பிரதேச அரசியல் பிரமுகர்கள் மற்றும் பள்ளிவாசல் தலைவர் பொது மக்கள் என வீதிக்கு போராட்டத்தில் இறங்கி தடுத்து நிறுத்தப்பட்ட இடங்கள் பலவற்றுக்கே இன்று காணி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டன.

பிரதேசத்தில் படை முகாம்கள் அமைக்கப்பட்ட இடங்கள் மக்களுக்கு எமது மாகாண சபை ஆட்சிக்காலத்தில் மீள பெற்றுக்கொடுக்கப்பட்டன இன்று அவற்றில் எமது மக்கள் அமைதியான முறையில் அவர்கள் வசித்துவருகின்றார்கள் இவ்வாறு தொடர்ந்தும் எமது முதல் அமைச்சர் பிரதேச செயலாளர் மாகாண காணி ஆணையாளர்,உதவி காணி ஆணையாளர்கள் எமது மக்களுக்கு உதவியதை நான் இந்த இடத்தில பாராட்டியாகவேனும் அத்தோடு தொடர்ந்தும் மிகுதி அனுமதி பாத்திரங்களை பெற்றுக்கொடுக்க உதவுவார்கள் என்பது நான் இந்த இடத்தில உறுதியாக கூறிக்கொள்கிறேன்.

காணி அமைச்சர் அவர்களோடு பல தடையவை நான் சபையில் முரண்பட்டுளேன் அவர்மீது எனக்கு எந்த தனிப்பட்ட குரோதங்களும் கிடையாது எமது மக்களுக்காகவே பல தடைவை முரண்பட்டேன்.

குச்சவெளி பிரதேச செயலாளர் அர்ப்பணிப்போடு சமூகத்தோடு இணைத்து செயற்படுத்த முழு அர்ப்பணிப்பு செய்துவருகின்றார் அவரை நானா இந்த இடத்தில பாராட்ட கடைமை பட்டுளேன் எனவும் தனது உரையில் குறிப்பிட்டார்.

மேலும் முதல் அமைச்சர் பேசுகையில்;

காணி அதிகாரத்தை முழுமையாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இவ்வாறான இந்த நிகழ்வு நல்லாட்சியிலே இவைகள் இடம்பெறுகின்றன. அதற்காக ஜானதிபதி மற்றும் பிரதமருக்கு விசேடமாக நன்றியை தெரிவித்ததுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் பல தடையவை கிழக்கு மாகாண சபை அமர்வில் காணி பிரச்சினைகளை கொண்டுவந்து பலமுறை வாதிட்டு காணி அமைச்சர் முரண்பட்ட வரலாற்றை என்னால் நினைவு படுத்தாமல் இருக்கமுடியாது எனவும் 

கிழக்கு மாகாண காணி அமைச்சர் ஆரியவதி பேசுகையில்;

காணி அனுமதி பத்திரங்கள் இல்லாதவர்களுக்கு வழக்குவதே எமது நோக்கு என்றும் நான் இன மதம் பாராமல் செயற்பட்டுவருகின்றேன். குறிப்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் பல தடைவை என்னோடு முரண்பட்டது குறித்து நான் பெரிதுபடுத்தவில்லை. அவரது பிரதேசம் சார்பாக கேட்ட கோரிக்கை நியாமானது. இந்த அனுமதி பத்திரங்கள் தொடர்பாக பல தடைவைகள் என்னிடம் துரிதப்படுத்துமாறு வேண்டினார்.

மாகாண காணி ஆணையாளர் பேசுகையில்;

கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களின் காணி பிரச்சினைகள் என்னால் பல முடித்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து எமது செயற்பாட்டில் பின்னடைவு கிடையாது புல்மோட்டை காணி விடயமாக நான் இந்த இடத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் அவர்களை பற்றி சில வார்த்தைகள் கூறியாகவேண்டும். உண்மையில் நீண்ட நாற்களாக அவரை எனக்கு தெரியும் உறுப்பினர் கானை விடயத்தில் அடிக்கடி எனது அலுவகத்திற்கு வருகை தந்து பிரதேச மக்களின் பிரச்சினைகளை முடித்து தருபவர். அத்தோடு பல கூட்டங்களில் இது விடயமாக அதிகம் பேசும் நபர் என்பதையும் சொல்லியே ஆகவேண்டும்.

குச்சவெளி பிரதேச செயலாளர் பேசுகையில்:

புல்மோட்டை பிரதேசத்திற்கு முதல் தடைவையாக இவ்வாறான அதிகளவிலான அனுமதி பத்திரங்கள் வழங்கப்படுவது முதல் தடைவையாகும். அதுவும் புல்மோட்டை பிரதேசத்தில் வரவேற்கதக்க விடயம் இன்னும் பல காணி அனுமதி பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து எமது அலுவலகத்தில் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றன புல்மோட்டை மாத்திரமல்ல குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல பிரதேசங்களும் இவற்றில் உள்ளடக்கபடுவதாகவும் தனது காலத்தில் ஏராளமான காணி பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -