வீதி அட்டகாசம் விவகாரம் :ஞானசாரக்கு எதிராக வழக்குத் தாக்கல்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் உட்பட மேலும் இரு பிக்குமாறுகளுக்கு எதிராக, ஹோமாகம பொலிஸாரினால், நேற்று (23) ஹோமாகம நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக வீதியில் பலவந்தமாக நுழைந்து, அங்கு பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளைத் தூற்றி, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஜூன் 09 ஆம் திகதி குறித்த சந்தேக நபர்களான பிக்குமாறு 3 பேரும், தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ வாயிலாக அதிவேக வீதிக்குள் பலவந்தமாக நுழைந்து அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளைத் தூற்றி, அங்கு வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்பை தாக்கி, அரசு சொத்துக்கு 60ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொலிஸார் நீதிமன்றுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.

வித்தாரன்தேனியே நந்த தேரர், ஏம்பிலிபிட்டியே விஜித தேரர் மற்றும் கலபொட அத்தே ஞானசார தேரர் ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -