மன்னாரில் விளையாட்டரங்கு, பிரதி அமைச்சர் ஹரீஸ் அடிக்கல் நாட்டிவைப்பு!

அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன்-


விளையாட்டுத்துறை அமைச்சின் 256 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் மன்னார் மாவட்ட விளையாட்டுத் தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (27) வெள்ளிக்கிழமை மன்னார் நானாட்டான் நறுவெலிக்குளத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விளையாட்டுத் தொகுதிக்கான அடிக்கல்லினை நட்டு வைத்தார்.

கிராமத்திலுள்ள திறமையான வீர, வீராங்கணைகளை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்படும் மாவட்ட மட்டத்தில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் இம்மைதானம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இம்மைதானம் 400 மீற்றர் ஓடுபாதை, நீச்சல் தடாகம், உள்ளக அரங்கு, பார்வையாளர் அரங்கு உட்பட சகல வசதிகளுடன் கூடிய மைதானமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுத்தீன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சார்ள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பாலசுப்ரமணியம் டெனிஸ்வரன், விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள், வட மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -