அஷ்ரப்.ஏ சமத்-
ஜ.தே.கட்சியின் 70 வருடங்கள் பூர்த்தியும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவின் 50 வயது பூர்த்தியையும் முன்ணிட்டு திஸ்ஸமகாரம வெலியத்த பிரதேசத்தில் 70 வீடுகளைக் கொண்ட லுனுகம்வெர எனும் எழுச்சிக் கிராமத்தினை பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்தாா். அமைச்சா் சஜித் பிரேமதாசாவின் 264 வீடமைப்புக் கிராமங்கள் நாடுமுழுவதிலும் உள்ள கிராமிய பிரதேசங்களில் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் இவ் வீடமைப்புத் திட்டம் திறந்து வைத்து மக்களிடம் கையளிக்கப்பட்டது. இவ் வீடமைப்புத்திட்டத்திற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 பேர்ச் காணி வழங்கப்பட்டது. அத்துடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இவ் வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய பிரதம மந்திரி;
இலங்கை அரசாங்கத்திற்கு ஜீ.எஸ்.பி பிளஸ் கிடைக்கப் பெற்றுள்ளது. இது இந்த நல்லாட்சிக்கு கிடைத்த மாபெரும்வெற்றியாகும். இதன் முலம் ஜரோப்பிய நாடுகளில் இலங்கை உற்பத்தி பொருட்களுக்கு உலக சந்தையில் கிராக்கி ஏற்படும். அத்துடன் கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவினால் ஆரம்பிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட ”காமண்ட் பெக்டறிகள்” மூடப்பட்டன. இனி வரும் காலத்தில் இப் பெக்டறிகள் மீள திறந்து தமது உற்பத்திகளை ஆரம்பிக்க முடியும். அத்துடன் மீன் உற்பத்தியில் ஜரோப்பிய நாடுகளில் ஏற்றுமதி செய்வதற்கும் சந்தை வாய்ப்பும் ஏற்படும். கடந்த காலங்களில் எம்மிடமிருந்து விடுபட்ட ஜி.எஸ்.பி பங்களதேஸ் நாடு அதனைப் பெற்றுக் கொண்டது. அந் நாட்டில் ஜி.எஸ்பி பிளஸ் 5 பங்காக பெருகியதனால் அவா்கள் அதில் பாரிய இலாபத்தினை பெற்றுள்ளனா்.
இதனால் மீனவா்கள் வாழ்க்கைத் தரம் உயரும். கடந்த சனிக்கிழமை ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார வலையத்தினால் இப்பிரதேசத்தில் உள்ள இளைஞா்களுக்கு தொழில் வாய்ப்பு கிட்டும், பாதைகள் அபிவிருத்தியாகும், தொழிலாளா்கள் மேலும் வீடுகள், ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்படும். இவ்வாறான திட்டத்தினை முன்னாள் ஜனாதிபதியும், நாமல் ராஜபக்சவும் ஏன் வேண்டாம் என்கின்றனா். இவா்களுக்கு வேண்டாம் என்றால் ஜனாதிபதி பொலநருவைக்கு கேட்கின்றார், மொணரகாலைக்குத் தாருங்கள் என அங்குள்ள அமைச்சா்கள் கேட்கின்றனா். என பிரதம மந்திரி தெரிவித்தார்.