ஒற்றுமைப்பட்டு முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து பயனிக்க வாருங்கள் அனைவருக்கும் அழைப்பு – நஸீர்


சப்னி அஹமட், பைஷல் இஸ்மாயில்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது மக்களால் உருவாக்கப்பட்ட பேரியக்கம் இதையளிக்க கட்சிக்குள் இருப்பவர்கள் எந்த முயற்ச்சி எடுத்தாலும் அது பழிக்கப்போவதும் இல்லை அவர்கள் வெற்றி பெற போவதும் இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனை அமைப்பாளரும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

இலங்கையின் முதலாவது தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் ஆரம்ப விழாவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுக்கூட்டமும் நேற்று (29) நிந்தவூர் அரசயடி தோட்டத்தில் இடம்பெற்ற போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியை அதன் தலைமையையும் தற்போது அழிக்க சிலர் கனவுகண்டுள்ளார் ஆனால் அது எதுவும் நடக்கப்போவது இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் தான் இருக்கின்றார்கள். கட்சியை அழிப்பதற்காக கட்சிக்குள் சிலர் எண்ணிக்கொண்டு செயற்படுகின்றார்கள் ஆனால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அறிய வேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை முகாநூல் மற்றும் சமூகவலைத்தளங்களில் விமர்சிப்பது ஊடாக இக்கட்சியை அழிக்க முடியும் என எவறும் எண்னிவிடாதீர்கள். மர்ஹூம் மறைந்த தலைவருடன் இன்று உள்ள பலரும் இந்த கட்சியை உருவாக்குவதற்காக பெரும் பங்காற்றி மிகக்கடினத்திற்கு மத்தியில் உருவாக்கிய இக்கட்சி இலங்கை வாழ் முஸ்லிம்களை வழிநடாத்தக்கூடிய ஓர் பேரியக்கம் எனபதை உலகமே இன்று அங்கீகரித்துள்ள நிலையில் இந்த சில்லரை தன விளையாட்டுக்கு யாரும் அஞ்சப்போவதில்லையும் மக்கள் ஏமாறப்போவதும் இல்லை.

மக்கள் தந்த அதிகாரங்களுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களால் அபிவிருத்து வேலைத்திட்டங்களை இலங்கை முழுவதும் பரந்து வாழும் மக்களுக்காக இன, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து துறைகளிலும் முஸ்லிம் காங்கிரஸினால் சேவைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அதில் குறிப்பாக எமது சுகாதாரத்துறையில் மத்தியிலும் மாகாணத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் அதிகராங்களை வைத்துக்கொண்டு பல்லாயிரக்கணக்கான பில்லியன்களை செலவு செய்து அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றது அதில் ஒன்றுதான் நிந்தவூர் மூன்று மத மக்களுக்காகவும் திறக்கப்பட்ட இலங்கையில் முதாவது தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலை.

இப்படியாக பலவகையான அதிகாரங்களுடன் இருக்கும் நாம் வெறும் கதிரைகளை சூடாக்கி இருப்பவர்களாக நாம் இருக்கப்போவதுமில்லை இருக்கவும் தயாரும் இல்லை எமக்கு கிடைத்திருக்கின்ற அதிகாரங்களை வைத்து முடிந்தளவு ஒவ்வொரு பிரதேசங்களை அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்கின்றோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அதிகாரமுள்ள ஒவ்வொருது பிரதிநிதிகளும் வெறுமென கதிரைகளை சூடாக்கி கொள்பவர்களாக இருப்பதில்லை முழு இலங்கையிலும் ஒவ்வொரு பிந்தங்கிய பிரதேசங்களையும் அபிவிருத்து செய்துவருகின்ற போது இந்த கட்சியை விமர்சிப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை விமர்சிப்பவர்கள் ஒருபோது பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டி விமர்சிப்பவர்கள் அல்ல அவர்கள் தங்களது அரசியல் இடங்களை பிடிக்க வேண்டும் என்ற எண்னத்துடனும் பதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்னத்துடனுமே பேசுகின்றார்கள் தவிற மக்கள் பிரச்சினைகளை கூறுவது கிடையாது.

ஆனால், இந்த கட்சியை வழிநடாத்துவதுவதற்கு அனைத்து துறைசார்களும் ஒற்றுமையுடன் திடகாத்திரத்துடனும் இருக்க வேண்டும் அவ்வாறு தான் நாம் எமது மக்களின் உரிமைகளை அடைவோம் அவ்வாறு இருக்க வேண்டும் எனறே இன்று இந்த கட்சியின் தலைவரும் அதன் உறுப்பினர்களும் செயற்படுகின்ற போது ஒரு சிலரின் சிறுபிள்ளைத்தன் விவகாரம் கவலையளிக்கின்றது. மக்கள் பிரச்சினைகள் இன்று இலங்கையில் அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு அதிகரித்து செல்லும் போது ஏன் இவ்வாறு மக்கள் பிரச்சினைகளை சிந்திக்காமல் தேவையற்ற சொந்த அபிலாசைகளை வெல்வதற்காக அற்ப விடயங்களுக்காக நேரான பாதையில் சிந்திப்பவர்களை தவறாக வழிநடத்தாமல் ஒற்றுமையாக சீரான பாதையில் பயனிக்க ஒற்றுனைந்து கருத்துவேறுபாடுகளை கலைந்து இணைந்து மக்கள் பிரச்சினைகளை தீர்க வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி மாத்திரமே முஸ்லிம்களின் அபிலாசைகளை வென்றுகொடுக்க முடியும் என்பதை புரிந்துகொண்டு ஒற்றுமையுடன் இணைந்து மக்களை சிலரின் சொந்த தேவைகளுக்காக குழப்ப வேண்டாம் எனவும் அறைகூவல் விடுகின்றோம்.

இக்கட்சியை யார் யாரெல்லாம் குழுதோண்ட எண்னுகின்றார்களோ அவர்களே அந்த குழிக்குள் விழுவார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது போல் மக்களும் ஓர் திடகாத்திரமான முடிவோடு இருக்கின்றார்கள் இருப்பார்கள் எனவும் நம்புகின்றோம்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் பைஷல் காசீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஸ்ட பிரதித்தலைவர் அப்துல் மஜீத், மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுடீன், அப்துல் ரசாக், தவம், மாஹிர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் பிரதேசசபை தவிசாளார்,உறுப்பினர்கள், சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்கரம, கிழக்கு மாகாண சுகாதார, ஆயுள்வேதஅமைச்சின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -