அபிவிருத்தியின் பலன்களை மக்கள் அனுபவிப்பதே நல்லாட்சியின் நோக்கம் - பைஸர் முஸ்தபா

ஐ.ஏ.காதிர் கான்- 
ல்லாட்சி அரசாங்கம் மலர்ந்து, இரண்டு வருடங்கள் பூர்த்தியாகி, மூன்றாவது வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழி காட்டலின் கீழ், உதயமாகியுள்ள புதிய ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டப் பணிகளுக்கு, இலங்கை வாழ் மக்கள் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து, தம்மாலான இயன்றளவு பங்களிப்புக்களை வழங்க முன் வர வேண்டும் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளைப் பூர்த்தியாக்கி, மூன்றாவது ஆண்டை ஆரம்பித்துள்ளதை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அந்த வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; அபிவிருத்தித் திட்டங்களின் பிரதி பலன்களை, பொது மக்கள் அனுபவிப்பதைக் காண்பதே, நல்லாட்சியின் உன்னத குறிக்கோளாகும். இலங்கையை நிலையான அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே, ஜனாதிபதியினதும் பிரதமரினதும் உண்மையான நோக்கமாகும். இன்றைய நல்லாட்சியில் இரண்டு தலைவர்களும் சர்வதேசத்துடன் சிறந்த தொடர்புகளைப் பேணி, அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

நிலையான பொருளாதாரம், நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு சூழ் நிலையை உருவாக்குவதற்காகவே, ஜனாதிபதியின் தலைமையின் கீழ், 2015 ஜனவரி 8 ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றது. இத்தகைய உன்னத குறிக்கோள்களை வெற்றி கொண்ட, மனித நேயமிக்க சமூகமொன்றை வலுவானதாகக் கட்டியெழுப்புவதற்கு, சகல மக்களும் இச்சந்தர்ப்பத்தில் ஒத்துழைப்பு வழங்க முன் வரவேண்டும். 

தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்களில், "நாடு" என்ற வகையில் நாம் பெறுமதியான பல வெற்றிகளைப் பெற்றுள்ளோம். இந்த வெற்றியின் பிண்ணனியில், நாம் தொடர்ந்தும் புரிய வேண்டிய பாரிய பல பணிகள் நம் கண் எதிரே இருப்பதால், இதனைக் கருத்திற் கொண்டு அனைத்து மக்களும் கட்சி, பேதங்களை மறந்து இச்சந்தர்ப்பத்தில் ஒன்றுபட்டு, ஜனாதிபதியின் கைகளைப் பலப்படுத்த முன் வரவேண்டும். "நிலையான யுகத்தில் மூன்றாவது வருடத்தை ஆரம்பிப்போம்" என்ற தொனிப் பொருளில், "நிலையான யுகத்தில் நாட்டின் பிரார்த்தனை, நிலையான இலக்கு" போன்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்களும், வறுமையை இலங்கையிலிருந்து நீக்குவதற்கான புதிய திட்டங்களும் இவ்வருடம் முதல் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

மக்களது எதிர்பார்ப்புக்கள் பல நிறைவுறும் ஆண்டாக 2017 ஆம் ஆண்டு அமையும் என தான் நம்புவதாகவும், 2017 தொடர்பாக மக்கள் தமது நீண்ட எதிர்பார்ப்புக்களை எவ்வித சந்தேகங்களுமின்றி வளர்த்துக்கொள்ள முடியும் என்றும், மிகவும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற வகையில் பொறுப்புடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இவ்வாறு அந்த விசேட வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -