மீராவோடை வைத்தியசாலையின் பணிகளை நேரில்சென்று பார்வையிட்டார் ஷிப்லி..!

எம்.ரீ.ஹைதர் அலி-
ல்குடாத் தொகுதியின், மீராவோடை பிரதேசத்தில் அமைந்துள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் 2017.01.07ஆந்திகதி விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இவ்விஜயத்தின்போது வைத்தியசாலையின் இரண்டாவது மாடியினை முற்றுமுழுதாக பூர்த்தி செய்வதற்காக மாகாண சபை நிதி ஒதிக்கீட்டிலிருந்து 48 இலட்சம் ரூபா ஒதிக்கீடு மேற்கொள்ளப்பட்டு கடந்த 2016.08.02ஆந்திகதி-செவ்வாய்க்கிழமை மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், மாகாண சுகாதார அமைச்சர் நஸீர், மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வைத்தியசாலையின் இரண்டாவது மாடியின் வேலைகள் பூரணமாக்கப்பட்டுள்ள நிலையில் அதனை பார்வையிடுவதற்காகவும், புதிதாக அமைக்கப்பெற்று வரும் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவின் வேலைகளை பார்வையிடுவதற்காகவும், வைத்தியசாலையின் ஏனைய தேவைப்பாடுகளை கேட்டறியும் முகமாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் இவ்விஜயம் அமைந்திருந்தது. 

அத்தோடு, இவ்வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களால் இவ்வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், ஏனைய ஊழியர்களின் நன்மை கருதி வாகனத் தரிப்பிடம் ஒன்றினை அமைத்துத்தருமாறும் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தனர். இதனைக்கருத்திற் கொண்ட பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அதனை அமைத்துத் தருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பானது வைத்தியசாலையின் பொறப்பதிகாரி எச்.எம்.எம். முஸ்தபா தலைமையில் நடைபெற்றதோடு, அபிவிருத்திக் குழுவின் செயலாளர் ஏ.எம். பாயிஸ் (ஆசிரியர்) மற்றும் உறுப்பினர்களான எம்.எச்.எம். நௌபல் (பொது சுகாதார பரிசோதகர்) ஏ. சஹாப்தீன், எம்.ரீ. ஹைதர் அலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -